இந்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்து காயத்தால் விலகிய வீரர்கள் எத்தனை பேர் தெரியுமா ? – லிஸ்ட் இதோ

jadeja

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய தொடர் ஆரம்பித்ததிலிருந்தே இந்திய அணி வீரர்கள் பலர் தொடர்ச்சியான காயம் காரணமாக அணியில் இருந்து விலகி வருகின்றனர். அதுகுறித்த பட்டியலையே தற்போது நாம் இந்த பதிவில் காண உள்ளோம்.

ishanth

அதன்படி இந்த ஆஸ்திரேலிய தொடர் ஆரம்பித்தபோதே இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறவில்லை. மேலும் ரோகித் சர்மா இடையில் காயம் சரியாகி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் தற்போது விளையாடி வந்தாலும், இசாந்த் சர்மாவால் ஆஸ்திரேலிய தொடரில் இணைய முடியவில்லை.

Bhuvi 1

புவனேஸ்வர் குமார் : ஐபிஎல் தொடரின்போது காயத்தால் அவதிப்பட்ட இவர் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவரால் காயத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. தற்போது அவர் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடி வருகிறார்.

Varun

- Advertisement -

வருண் சக்கரவர்த்தி : தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்திருந்தார். ஆனால் தோள்பட்டை காயம் காரணமாக தனது இடத்தை பறிகொடுத்த இவர் தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு பதிலாக நடராஜன் இந்திய அணியில் விளையாடி கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Shami 2

முகமது ஷமி : கடந்த 2018-2019 ஆஸ்திரேலிய தொடரின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஷமி இம்முறையும் சிறப்பாக பந்து வீசி வந்தார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விலகினார்.

umesh

உமேஷ் யாதவ் : இரண்டாவது போட்டியில் போது ஏற்பட்ட தொடைப் பகுதி காயத்தால் அவர் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இருந்து வெளியேறினார்.

Agarwal-1

மாயங்க் அகர்வால் : இந்திய அணியின் துவக்க வீரர் ஆக விளையாடி வந்த இவர் பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் உள்ளார்.

Rahul

கேஎல் ராகுல் : முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமுடியாமல் இருந்த இவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

jadeja 1

ரவீந்திர ஜடேஜா : டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அட்டகாசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முடிவு காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

Vihari

ஹனுமா விஹாரி : மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மீதமுள்ள டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதுமட்டுமின்றி அஷ்வின் மற்றும் பண்ட் ஆகியோர் மூன்றாவது போட்டியின் போது காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.