IND vs ENG : இந்திய அணியின் புதிய ஜெர்ஸி எதற்கு தெரியுமா ? – அது தெரிந்தால் கலாய்க்க மாட்டீங்க

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரை

Jersy
- Advertisement -

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india

- Advertisement -

அடுத்ததாக இந்திய அணி வரும் 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் புதிய சீருடை தற்போது அறிவிக்கப்பட்டு அதற்கான ஃபோட்டோ ஷூட்டும் இந்திய அணி முடித்துவிட்டது. இந்நிலையில் புதிய சீருடையை பற்றி இந்திய ரசிகர்கள் பல விதமாக கலாய்த்து வருகின்றனர். சிலர் கேஸ் சிலிண்டர் சீருடை மேலும் சிலர் பெட்ரோல் பங்க் சீருடை மேலும் சிலர் swiggy சீருடை என்று பலரும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த புதிய சீருடை கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

Orange

அது யாதெனில் இந்திய அணி அந்த புதிய சீருடை அணிந்து பங்கேற்கும் போட்டி (one day 4 children) ஒன் டே ஃபார் சில்ட்ரன் என்ற கோரிக்கைக்காக யுனிசெப் உடன் இணைந்து இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது. இதன்மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்ட இந்த சீருடையுடன் இந்திய அணி விளையாடுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.

Advertisement