IND vs AUS : லண்டன் ஓவல் மைதானத்தில் கெத்து காட்டிய இந்திய ரசிகர்கள் – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய

Indian-Fans
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேபோன்று ஆஸ்திரேலிய அணியிடம் எந்த மாற்றமும் இல்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங்கை விளையாடி வருகிறது இதுவரை 25 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. ரோகித் சர்மா 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்திய ரசிகர்களின் ஆதரவிலான இந்த போட்டியின் புள்ளி விவரம் இந்த போட்டியை ஆக்கிரமித்துள்ளது வியப்பளிக்கிறது. ஏனெனில் மொத்தம் 25,000 பேர் இருக்கைகள் கொண்ட ஓவல் மைதானத்தில் 80 சதவீதம் டிக்கெட்டுகள் அதாவது கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் இந்திய ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவினை அளிக்க மைதானத்திற்கு வந்துள்ளனர்.

rohith

மீதியுள்ள 5,000 ரசிகர்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவாக மைதானத்தில் இருக்கின்றனர். இந்த ரசிகர் பட்டாளத்தை மூலம் இந்திய அணி தனது பலத்தை இங்கிலாந்திலும் நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் எந்த நாடுகளில் இந்திய அணி சென்று ஆடினாலும் அது இந்தியாவில் நடைபெறும் போட்டி போலவே இருப்பது இந்திய ரசிகர்களின் ஆதரவினால் மட்டுமே நடக்கிறது. எனவே இந்த போட்டிகளில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement