தோனியின் டாப் 10 சாதனைகள். அவர் ஒரு லெஜண்ட் என்பதற்கான சில உதாரணங்கள் – பிறந்தநாள் பதிவு இதோ

Dhoni-4
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தோனி பிறந்தநாள் குறித்த சிறப்பு #HappyBirthDay ஹேஷ் டேக்குடன் வெகு விமர்சையாக அவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். மேலும் தங்களது தல தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

தோனிக்கு பல்வேறு பிரபலங்கள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒப்பிட முடியாத கேப்டனாக கருதப்படும் தோனியின் டாப்10 சாதனைகளை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

1) கபில்தேவ், கங்குலி ஆகியோரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் தோனி கேப்டன்ஷிப்பில் தனி சிறப்பு வாய்ந்தவர். அவரது தலைமையிலேயே டி20, 50 ஓவர், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று ஐசிசி பட்டங்களையும் இந்திய அணி வென்றுள்ளது.

2) 2007 ஆம் ஆண்டு டி20 கோபிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனி 2008ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தியாவுக்காக 332 போட்டிகளுக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். இது ஒரு உலக சாதனை இதற்கு முன்பாக அதிக போட்டிகளில் கேப்டன் பதவி வகித்தவர் என்ற பட்டியலில் பாண்டிங் 324 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

- Advertisement -

3) அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற சாதனையும் தோனி தன் வசம் வைத்துள்ளார் இதுவரை 332 போட்டிகளுக்குத் தலைமை தாங்கிய தோனி 178 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

Dhoni

4) இந்திய கேப்டன்களில் அதிக ரன்கள் குவித்தது தோனி மட்டுமே 200 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள தோனி 6641 ரன்களை குவித்துள்ளார். வேறு எந்த இந்திய கேப்டனும் இந்த சாதனையை செய்தது இல்லை.

- Advertisement -

5) கேப்டனாக அதிக சிக்சர் அடித்த வீரர் தோனி தான் 204 சிக்சர்களை அவர் 200 ஒருநாள் போட்டிகளில் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

6) ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக இருக்கும் தோனி 174 போட்டிகளில் கேப்டனாக இருந்து 104 போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

7) சர்வதேச அளவில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோர் தோனி உடையதுதான் தோனி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 145 பந்துகளில் 183 ரன்களை குவித்துள்ளார்.

Dhoni 3

8) சிக்ஸர் அடித்து உலக கோப்பையை வெற்றி பெற்றுக் கொடுத்த ஒரே ஒரு சர்வதேச கேப்டன் தோனிதான் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் குலசேகரா வீசிய பந்தை சிக்ஸ் அடித்து அவர் இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

9) அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் தோனி உடையதே இதுவரை மூன்று விதமான கிரிக்கெட்டிலும் 538 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 195 ஸ்டம்பிங் செய்துள்ளார் இவருக்கு அடுத்தபடியாக சங்ககாரா 139 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

10) இந்தியாவின் தலை சிறந்த விக்கெட் கீப்பர் தோனி தான் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 829 வீரர்களை இவர் தனது கீப்பிங் மூலம் அவுட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 195 ஸ்டம்பிங், 634 கேட்சிகளும் அடங்கும்

Advertisement