ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுமா? தங்களின் 2 கொள்கையை அறிவித்த இந்திய அரசு

Team India 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அத்தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் மோத உள்ளன. அந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி நிலவுகிறது. ஏனெனில் தற்சமயத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக உச்சகட்ட விரிசல் ஏற்பட்டுள்ளது.

அந்த சூழ்நிலையில் கடந்த மாதம் இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய லெஜென்ட்ஸ் லீக் தொடர் நடைபெற்றது. அத்தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டில் விளையாடலாமா? என்ற விமர்சனம் எழுந்தது. அதனால் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியினர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகினர்.

- Advertisement -

இந்திய அரசின் 2 கொள்கை:

அதே போல ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடர்களில் மோதுவதில்லை என்ற கொள்கையில் மாற்றமில்லை என இந்திய அரசாங்கத்தின் விளையாட்டு துறை அறிவித்துள்ளது. அதே சமயம் ஐசிசி மற்றும் ஆசிய கவுன்சில் நடத்தும் பலதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதற்கு தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி இந்திய விளையாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “பாகிஸ்தான் சம்பந்தமான விளையாட்டு நிகழ்வுகளில் இந்தியாவின் அணுகுமுறை அதனுடைய ஒட்டுமொத்த கொள்கையைப் பிரதிபலிக்கிறது. இருதரப்பு விளையாட்டுத் தொடர்களைப் பொறுத்த வரையில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணிகள் பங்கேற்காது”

- Advertisement -

ஆசிய கோப்பை மோதல்:

“மேலும் பாகிஸ்தான் அணிகளை இந்தியாவில் விளையாட அனுமதிக்க மாட்டோம். இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியை ஆசிய கோப்பை போன்ற பலதரப்பு தொடரில் விளையாட நாங்கள் தடுக்க மாட்டோம். ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை அனுமதிக்க மாட்டோம். பலதரப்பு தொடர்களில் விளையாடுவதை நாங்கள் தடுக்கவில்லை”

இதையும் படிங்க: இன்னும் 1 விக்கெட் போதும்.. முதல் இந்திய வீரராக அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தப்போகும் சாதனை – விவரம் இதோ

“ஒலிம்பிக் தொடர்களில் விளையாடுவது குறித்து தனியாக விவாதித்து முடிவெடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2025 ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவது உறுதியாகியுள்ளது. அத்தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் 3 போட்டிகளில் விளையாடுவதைப் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement