- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில்லை நீக்கிட்டு அவருக்கு ஓப்பனருக்கான சேன்ஸை தாங்க – ரசிகர்கள் குமுறல்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் தற்போது டி20 தொடரிலும் சொதப்பி வருவதால் அவரது இடம் மீது பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு சுப்மன் கில்லை அடுத்த இந்திய நட்சத்திர வீரராக மாற்றும் முயற்சியில் பிசிசிஐ சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுப்மன் கில்லை துவக்க வீரருக்கான இடத்தில் இருந்து நீக்கவேண்டும் : ரசிகர்கள் வேண்டுகோள்

அந்த வகையில் கடந்த ஓராண்டாக டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவரை டி20 அணிக்குள் கொண்டு வந்ததோடு சேர்த்து துவக்க வீரருக்கான இடத்தையும் இந்திய அணி வழங்கியது. அதோடு துணை கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டதால் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். அதன் காரணமாக சஞ்சு சாம்சன் தனது துவக்க வீரருக்கான இடத்தினை இழந்து மிடில் ஆடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார்.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய மூன்றாவது டி20 ஆட்டத்தில் அவருக்கு அந்த இடமும் பறிக்கப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணிக்குள் கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் ஹோபர்ட் நகரில் நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியிலும் சுப்மன் கில் 12 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வேளையில் அவரது பேட்டிங் மீதான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இது குறித்து ரசிகர்கள் பகிர்ந்துள்ள கருத்தில் : மூன்று போட்டிகளில் விளையாடி 57 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வரும் சுப்மன் கில்லுக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை டி20 அணிக்குள் கொண்டு வரலாம். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட ஜெய்ஸ்வால் டி20 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடக் கூடியவர்.

- Advertisement -

அதனால் அவரை டி20 அணிக்கு கொண்டுவர வேண்டும். டி20 போட்டிகளில் 160-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வரும் அவர் அனைத்து போட்டிகளிலுமே ரன் குவிக்கக்கூடிய வீரராக இருந்து வருகிறார். அதோடு துவக்க ஓவர்களில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அவர் அதிரடியான துவக்கத்தை அளிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கும் நல்லது.

இதையும் படிங்க : பவுலிங் இல்லனா என்ன? பேட்டிங்கில் வித்தையை காட்டிய வாஷிங்டன் சுந்தர்.. தரமான ஆட்டம் – விவரம் இதோ

அதனால் சுப்மன் கில்லை துணை கேப்டனாக இருந்து நீக்குவதோடு மட்டுமின்றி அவரை டி20 அணியில் இருந்து வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை கொண்டுவர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது குமுறல்களை சமூக வலைத்தளத்தின் மூலம் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -