INDvsNZ : 3ஆவது டி20 போட்டியிலாவது அவருக்கு அறிமுக வாய்ப்பு குடுங்க – ரசிகர்கள் கோரிக்கை

Indian-Fans
- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டி கடந்த 18-ஆம் தேதி வெலிங்டனில் நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக அப்போட்டி ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

INDvsNZ

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி கடந்த 20-ஆம் தேதி மவுன்ட் மாங்கனி நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணத்தில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி நவம்பர் 22-ஆம் தேதி நேப்பியர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரரான சுப்மன் கில் அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு இரண்டாவது டி20 போட்டியின் போது அறிமுக வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியை எழுப்பியது.

Shubman Gill

ஏனெனில் துவக்க வீரராக செட்டாகாத ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக அவரை மிடில் ஆர்டருக்கு தள்ளிவிட்டு சுப்மன் கில்லை சேர்த்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் எதிர்வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியிலாவது அவருக்கு டி20 கிரிக்கெட்டில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs NZ : நீங்க சேக்கலனா என்ன? நாங்க சப்போர்ட் பண்ணுவோம் – நியூசிலாந்திலும் கெத்து காட்டும் சாம்சன் ரசிகர்கள்

ஏற்கனவே இந்தி அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் துவக்க வீரராக விளையாடி வரும் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நாளைய போட்டியின் டாசுக்கு பிறகே அவர் அணியில் இருப்பாரா? இல்லையா? என்பது உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement