இந்திய அணி ரொம்ப ஈஸியா இலங்கை அணியை ஜெயிச்சிருந்தாலும் – தவறை சுட்டிக்காட்டி கடுப்பான ரசிகர்கள்

Ishan-Kishan-Keeper
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரோகித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரமாண்டமான இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

INDvsSL

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 62 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி மெகா வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணி இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அமர்க்களமாக இந்தப் போட்டியில் வெற்றியை பெற்றிருந்தாலும் இந்திய அணியின் பீல்டிங் நேற்று படுமோசமாக இருந்தது.

Rohith

அதிலும் குறிப்பாக பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் இந்திய அணியின் வீரர்கள் எளிதான பல கேட்ச்களை தவறிவிட்டனர். அதோடு பவுண்டரி எல்லைகளிலும் பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை. எளிதாக கைக்கு வந்த கேட்ச்களை கூட இந்திய வீரர்கள் தவறவிட்டது ரசிகர்களின் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் பெரிய மைதானங்களில் விளையாடும் போது பந்து மிக உயரத்திற்கு சென்றால் வீரர்கள் அதனை பிடிப்பதில் தடுமாறக் கூடாது. ஏனெனில் எதிர் வரும் t20 உலகக்கோப்பை தொடரானது ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால் இதே பீல்டிங் திறனுடன் அங்கு சென்றால் வேலைக்காகாது. ஏனெனில் ஒரு கேட்சை விட்டால் அது ஆட்டத்தின் முடிவை கூட மாற்றலாம். எனவே இந்திய அணி பீல்டிங்கில் இன்னும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவிடம் இருந்து அறிமுக தொப்பியினை பெற்ற போது கண் கலங்கிய தீபக் ஹூடா – எதற்கு தெரியுமா?

மேலும் நேற்றைய ஆட்டம் முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா கூட இறுதியில் இந்திய அணியின் பீல்டிங் குறைகளை சுட்டிக் காண்பித்து இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் இன்னும் அதிக வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement