ரோஹித் சர்மாவிடம் இருந்து அறிமுக தொப்பியினை பெற்ற போது கண் கலங்கிய தீபக் ஹூடா – எதற்கு தெரியுமா?

Hooda
- Advertisement -

இலங்கைக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று லக்னோவில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 199/3 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய இந்தியாவின் டாப் 3 வீரர்களான இஷான் கிசான் 89 (56) ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் 57* (28) ரன்கள், ரோஹித் சர்மா 44 (32 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

இதை அடுத்து 200 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இலங்கை அணி வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே 60/5 என தடுமாறினார்கள். அதனால் இறுதிவரை அதிலிருந்து மீள முடியாத அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 137/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ருசித்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என முன்னிலை வகிக்கிறது.

அறிமுமாக தீபக் ஹூடா:
முன்னதாக கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா 6 அதிரடி மாற்றங்களை செய்தார். இப்போட்டிக்கான இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு திரும்பிய சஞ்சு சாம்சன், காயத்திலிருந்து திரும்பியுள்ள ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வென்ற சஹால், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பிடிக்க 26 வயது நிரம்பிய இளம் வீரர் தீபக் ஹூடா அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

hooda 1

இத்தனைக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இவர் இந்தியாவுக்காக விளையாட முதல் முறையாக அறிமுகமானார். அந்தப் போட்டியானது இந்தியா விளையாடிய 1000வது ஒருநாள் போட்டி என்பதால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 1000 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற சரித்திர உலக சாதனையை இந்தியா படைத்தது. அப்படிப்பட்ட அந்த அதிர்ஷ்டம் மிகுந்த அந்த நாளில் இந்தியாவிற்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்ற தீபக் ஹூடா தனது தொப்பியை இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலியிடமிருந்து பெற்றது அவரின் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

ஆனந்த கண்ணீர்:
அந்த அதிர்ஷ்டமான நாளில் இந்திய தொப்பியை பெற்ற அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியிலும் முழுமையான வாய்ப்பை பெற்று சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி நிர்வாகத்தினரின் கவனத்தை ஈர்த்திருந்தார். தற்போது அந்த அதிர்ஷ்டம் தானோ என்னவோ தெரியவில்லை அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் நேற்று இலங்கைக்கு எதிராக துவங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற தீபக் ஹூடா தனது டி20 தொப்பியை இந்தமுறை நேரிடையாக இந்தியாவின் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் இருந்து இதர வீரர்களின் கரகோஷத்திற்கிடையே பெற்றார்.

Hooda-2

நேற்றைய போட்டியில் ரோகித் ஷர்மாவிடம் இருந்து தொப்பியை பெற்ற போது மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட தீபக் ஹூடா இந்தியாவிற்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெற்றதை நினைத்து ஒரு சில நிமிடங்கள் பெருமையுடன் ஆனந்தத்தில் கண் கலங்கி நின்றார்.

- Advertisement -

அவரின் அந்த கண்ணீருக்கு பின் ஒரு மிகப் பெரிய கதையே உள்ளது என்பது சில இந்திய ரசிகர்களுக்கு தெரிந்திருக்காது. ஆம் கடந்த பல வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக விளையாடி வந்த அவர் க்ருனால் பாண்டியாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பரோடா அணியில் விளையாட தடைசெய்யப்பட்டார்.

இழைக்கப்பட்ட அநீதி – மாறிய வாழ்க்கை:
அதன்பின்னர் பரோடா அணியில் இருந்து வெளியேறிய தீபக் ஹூடா ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட ஆரம்பித்தார். அப்படி ராஜஸ்தான் அணிக்காக விளையாட ஆரபத்ததில் இருந்து அவரது கரியரே உச்சத்திற்கு சென்றது எனலாம். ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணிக்காகவும் தேர்வாகி தற்போது விளையாடி வருகிறார்.

- Advertisement -

hooda

பொதுவாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி நல்ல பெயரை பெற்றால் மட்டுமே இந்திய அணியில் விளையாட முடியும் என்ற நிலைமையில் தமக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியால் தீபக் ஹூடா மிகுந்த மனவேதனை அடைந்தார். அந்த மோசமான தருணத்தில் வேறு வழியின்றி தவித்த அவருக்கு முன்னாள் இந்திய வீரர்கள் இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் ஆதரவு கரம் நீட்ட அவர்களின் உதவியுடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் வாரியமும் அவருக்கு நிறைய உதவிகளை செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்புகளை அளித்தது.

இதையும் படிங்க : என்னப்பா இதெல்லாம். இவருக்கும் டீமுக்கும் ராசியே இல்ல போலயே – பறிபோகும் இளம்வீரரின் வாய்ப்பு

அதை சரியாக பயன்படுத்திய அவர் ஐபிஎல் போட்டிகளிலும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு இந்திய தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்து வந்தார். அதன்காரணமாக தற்போது பல தடைகளுக்கு பின் ஒரே வருடத்தில் இந்திய அணியில் விளையாடும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அதன் காரணமாகவே நேற்றைய போட்டியில் தனது இந்திய தொப்பியை வாங்கும் போது அவர் ஆனந்தத்தில் கண் கலங்கி நின்றார்.

மொத்தத்தில் ஒரு கட்டத்தில் மாநில அணிக்கு கூட விளையாட முடியாது என்ற மோசமான நிலையில் இருந்த அவரின் கிரிக்கெட் வாழ்க்கை இன்று சூப்பராக மாறியதுடன் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இதிலிருந்து விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் எத்தனை தடைகள் வந்தாலும் அதை கடந்து நிச்சயம் வெற்றி பெறலாம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

Advertisement