நல்லவேளை உங்கள அவசரப்பட்டு இந்தியாவுக்கு செலக்ட் பண்ணல, சர்பராஸ் கான் மீது ரசிகர்கள் அதிருப்தி – காரணம் என்ன?

Sarfaraz Khan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டாமினிக்கா நகரில் துவங்கியது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்ததால் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியில் புஜாரா மட்டும் கழற்றி விடப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ரஞ்சி கோப்பையில் கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வரும் சர்ப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியது.

மேலும் அவரை விட சற்று குறைவான சராசரியில் ரஞ்சி கோப்பையில் ரன்களை எடுத்தும் ஐபிஎல் தொடரில் அசத்திய காரணத்தால் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தேர்வானார்கள். அதன் காரணமாக ரஞ்சி கோப்பையை குப்பையில் தூக்கி போடுங்கள் என்று விமர்சித்த சில முன்னாள் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய இன்னும் அவர் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
இருப்பினும் கடந்த வருடம் ஒரு ரஞ்சிக் கோப்பை போட்டியில் சதமடித்து போது தமக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று அப்போதைய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மாவை மிரட்டும் வகையில் சைகையை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்ப்புகளை தெரிவித்து ஒழுங்கான நன்னடத்தையை பின்பற்றாதாலேயே தேர்வு செய்யப்படவில்லை என்று செய்திகள் வெளியாகின.

மேலும் சர்வதேச தரத்துக்கு நிகரான ஃபிட்னஸ் கடைபிடிக்காமல் ரஞ்சித் கோப்பையில் தரமற்ற பவுலிங்கை எதிர்கொண்டு வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் காரணத்தாலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றும் தேர்வு குழு சார்பில் செய்திகள் வெளியாகின. அந்த நிலையில் நடைபெற்று வரும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பையில் மேற்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் அவர் மத்திய மண்டலத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதல் இன்னிங்ஸில் 12 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டான நிலையில் 2வது இன்னிங்சிலும் 6 (30) ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டலம் கேப்டன் ஹனுமா விஹாரி 63, திலக் வர்மா 40 ரன்கள் எடுத்த உதவியுடன் 213 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து விளையாடி வரும் மேற்கு மண்டலத்திற்கு பிரித்வி ஷா 65 ரன்கள் எடுத்து அசத்திய போதிலும் மிடில் ஆர்டரில் புஜாரா 9, சூரியகுமார் யாதவ் 8 என நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் நங்கூரமாக விளையாட வேண்டிய சர்ப்ராஸ் கான் 4 பந்துகளை எதிர்கொண்டு மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அந்த வகையில் இந்த துலீப் கோப்பையில்அழுத்தம் நிறைந்த செமி ஃபைனல் மற்றும் ஃபைனலில் இதுவரை அவர் 0, 6, 0 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக கடந்த காலங்களில் அவர் பெரும்பாலும் லீக் சுற்றில் தான் அதிக ரன்களை அடித்ததாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அழுத்தமான போட்டிகளில் உள்ளூர் தொடரிலேயே தடுமாறும் நீங்கள் சர்வதேச அளவில் எப்படி அசத்தப் போகிறீர்கள் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க:வீடியோ : ரசிகனை போல ஆட்டோகிராப் வாங்கிய தமிழ் பட இயக்குனர் – தமிழ் ரசிகரின் கோரிக்கையை நிறைவேற்றிய தல தோனி

அதனால் முதலில் நவீன கிரிக்கெட்டில் தாக்குபிடித்து நீண்ட காலம் விளையாடக்கூடிய வாய்ப்பை பெறுவதற்கு நல்ல ஃபிட்னஸ் கடைப்பிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேர்வு குழுவுக்கு எதிராக பதிவிடுவதை நிறுத்தி சிறப்பாக செயல்படுமாறு நிறைய ரசிகர்கள் அவருக்கு ஆலோசனை தெரிவிக்கின்றனர். இருப்பினும் சமீபத்தில் சௌரவ் கங்குலி தெரிவித்தது போல் இந்த 3 போட்டிகளில் சுமாராக செயல்பட்டதை வைத்து மதிப்பிட முடியாது என்பதால் அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தால் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement