2024ஆம் ஆண்டின் உருட்டு இதானா? பும்ராவை விட பாபர் சிறந்தவராக தீர்மானித்த ஐசிசியை விளாசும் ரசிகர்கள்

Jasprit Bumrah 3
- Advertisement -

உலகம் முழுவதிலும் 2024 வருடம் நிறைவு பெற்று 2025 புத்தாண்டு கோலாகலமாக துவங்கியுள்ளது. முன்னதாக ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கமாகும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்காக தகுதியான வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

அதில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், பாகிஸ்தானின் பாபர் அசாம், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதில் பாபர் அசாம் பெயரை பார்க்கும் இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் 2024ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அவர் ஒரு ஆட்டநாயகன் விருதுகளை கூட வெல்லவில்லை.

- Advertisement -

ஐசிசியின் மெகா உருட்டு:

சொல்லப்போனால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக விளையாடிய அவர் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. அதே போல ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக கோப்பையை வென்ற ரோஹித் சர்மாவின் பெயர்களும் இல்லை.

அதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் 15 விக்கெட்டுகளை எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் அபாரமாக பந்து வீசிய அவர் தான் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அப்படிப்பட்ட அவருடைய பெயர் இந்தப் பரிந்துரை பட்டியலில் கூட இடம் பெறவில்லை.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:

இவை அனைத்தையும் தெரிந்த ஐசிசி இந்தப் பரிந்துரை பட்டியலில் ஜஸ்ப்ரித் பும்ராவை சேர்க்கவில்லை. இதிலிருந்து ஜஸ்ப்ரித் பும்ராவை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று ஐசிசி தீர்மானித்துள்ளது என்றே சொல்லலாம். அதனால் அதிருப்தியடையும் இந்திய ரசிகர்கள் இது தான் 2024ஆம் ஆண்டின் உருட்டா? என்று ட்விட்டரில் ஐசிசியை விளாசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் அந்த விருப்பத்தால் தான் சுப்மன் கில் 4 ஆவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார் – கவாஸ்கர் விளாசல்

அதே சமயம் இந்தப் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ள அர்ஷ்தீப் சிங் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு 17 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். அதனால் ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் சாதனை படைத்தார். எனவே அர்ஷ்தீப் இந்த விருதை வெல்ல வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

Advertisement