நீங்க இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா? ரிஷப் பண்ட்டை நினைவுகூர்ந்து – ரசிகர்கள் பகிரும் கருத்து

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்ஸ்சை விளையாடி முடித்துள்ள இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக தற்போது ஒரு ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணியானது தங்களது இரண்டாவது இன்னிசை விளையாடி வருகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா தங்களது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தங்களது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் குவித்து 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இரு அணிகளுக்குமே தற்போது வெற்றி வாய்ப்பு சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக தங்களது முதல் இன்னிங்க்ஸை ஆரம்பித்தாலும் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் அடுத்தடுத்து இந்திய வீரர்களை ஆட்டம் இழக்க வைத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் அவரது இந்த அற்புதமான பந்துவீச்சுக்கு பிறகு நாதன் லயனுக்கு எதிராக விளையாட ரிஷப் பண்ட் இல்லையே என்று ரசிகர்கள் தங்களது வருத்தங்களை கருத்துக்களாக பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ரிஷப் பண்ட் இந்திய மைதானம் மட்டுமின்றி ஆஸ்திரேலியா மைதானத்திலும் லயனுக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இதுவரை ரிஷப் பண்ட் நாதன் லயனுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 95 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பந்துக்கு பந்து அவருக்கு எதிராக ரன்களை சேகரித்துள்ளார்.

இதையும் படிங்க : NZ vs ENG : கிளன் மெக்ராத் – வார்னேவை மிஞ்சிய ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டூவர்ட் ப்ராட், புதிய பிரம்மாண்ட இரட்டை உலக சாதனை

அதோடு ஒவ்வொரு நான்கு பந்துகளுக்கு ஒருமுறை பவுண்டரியை அவர் நாதன் லயனுக்கு எதிராக அடித்துள்ளார். எனவே ரிஷப் பண்ட் அவருக்கு எதிராக அடிக்கும் சிக்ஸர்களை வீடியோவை பதிவிட்டு உங்களை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம் என்று ரசிகர்கள் தங்களது வருத்தங்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement