யூ டியூபுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம், ரமீஸ் ராஜாவை கலாய்த்து தள்ளும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதோ

Ramiz Raja Sourav Ganguly
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்ற டெஸ்ட் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் வைட் வாஷ் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதற்கு முன்பாக நடைபெற்ற டி20 தொடரில் 4 – 3 (7) என்ற கணக்கில் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக உலகக்கோப்பையிலும் ஃபைனலில் தோற்றது. அத்துடன் ஏற்கனவே ஆசிய கோப்பையில் இலங்கையிடம் பைனலில் தோற்ற அந்த அணி கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் களமிறங்கிய டெஸ்ட் தொடரிலும் 1 – 0 (3) என்ற கணக்கில் தோற்றது.

அந்த தோல்வியும் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியையும் சேர்த்து 1959க்குப்பின் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் தோற்ற பரிதாபத்தையும் பாகிஸ்தான் சந்தித்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் தார் ரோட் போல் பிட்ச் இருந்ததால் ஐசிசி தண்டனை வழங்கியது.

- Advertisement -

யூ டியூப் வாங்க:
அப்போது அடுத்த தொடருக்குள் தரமான பிட்ச்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்த ரமீஷ் ராஜா வாயில் சொன்னதை செயலில் காட்டத் தவறினார். அத்துடன் 2023 ஆசிய கிரிக்கெட் கோப்பை விவாகரத்தில் பணக்கார இந்திய அணியை உலகக்கோப்பையில் தோற்கடித்தோம், எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்கள் நாட்டுக்கு வர மாட்டோம், எங்களது அணி பங்கேற்காத 2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றால் அதை யார் பார்ப்பார்கள் என்று தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பேசி வருகிறார். குறிப்பாக ஏற்கனவே எல்லை பிரச்சினையால் பிரிந்து கிடக்கும் இரு நாடுகளுக்கு இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சுக்கள் இருந்து வருகிறது.

அப்படி தேவையின்றி வாயில் மட்டும் பேசிய அவர் செயலில் எதையுமே காட்ட தவறியதுடன் அவரது தலைமையில் பாகிஸ்தான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடமே அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் வாரிய தலைவர் பதவிலிருந்து ரமீஷ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதில் ஏற்கனவே தலைவராக இருந்த நஜாம் செதி மீண்டும் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

ஏற்கனவே கடந்த 2018இல் தலைவராக இருந்த நஜாம் செதி பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் வருகைக்குப்பின் ஆதரவு இழந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். மறுபுறம் இம்ரான் கான் பரிந்துரையின் பெயரில் கடந்த 2021 செப்டம்பரில் புதிய தலைவராக பொறுப்பேற்ற ரமீஸ் ராஜா தலைமையில் பாகிஸ்தான் வாரியத்தில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை. அந்த நிலையில் தற்போது இம்ரான் கான் வெளியேறிய நிலையில் சபாஷ் செரிப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

அவரை சமீபத்தில் லாகூரில் சந்தித்த முன்னாள் தலைவர் நஜாம் செதி ரமீஸ் ராஜா தலைமையில் பாகிஸ்தான் வாரியம் சந்தித்துள்ள வீழ்ச்சியை எடுத்துரைத்தாக கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே செய்திகள் வெளியானது. அதை கவனித்து வரும் புதிய பிரதமரும் அவரது கோரிக்கைகளை ஏற்று ரமீஸ் ராஜாவுக்கு பதில் நஜாம் செதியை புதிய தலைவராக நியமிக்க ஆதரவு கொடுத்ததாக தெரிகிறது. அதை தொடர்ந்து மீண்டும் நஜாம் செதி புதிய தலைவராக பொறுப்பேற்கும் அதிகாரப்பூர்வ தகவலை பாகிஸ்தான் வாரியம் விரைவில் வெளியிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: IND vs BAN : குல்தீப் யாதவை நீக்கிவிட்டு ஜெய்தேவ் உனட்கட்டை அணியில் சேர்க்க – காரணம் இதுதானாம்

அதை அறிந்த ரசிகர்கள் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க இனிமேல் வருமானத்திற்கு என்ன செய்விங்க பேசாமல் வழக்கம் போல இந்தியாவை விமர்சித்து சம்பாதிக்க ஏற்கனவே வைத்துள்ள யூடியூப் சேனலுக்கு மீண்டும் உங்களை வரவேற்கிறோம் என்று சமூக வலைதளங்களில் கடுமையாக கலாய்த்து தள்ளுகிறார்கள். அத்துடன் வலுக்கட்டாயமாக தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவரை வழக்கம் போல விதவிதமாக ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement