நீங்க எவ்ளோ காசு கொடுத்தீங்க, ரவி சாஸ்திரியிடம் திமிராக பேசிய பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

Pak vs BAn
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் நவம்பர் 6ஆம் தேதியன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 40வது போட்டியில் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்த நெதர்லாந்தை நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் வலுவான தென்னாப்பிரிக்கா எதிர்கொண்டது. ஆனால் காலம் காலமாக உலக கோப்பையில் சொதப்பும் அந்த அணி இந்த முக்கிய போட்டியில் நெதர்லாந்து நிர்ணயத்தை 159 ரன்கள் சேசிங் செய்ய முடியாமல் 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அதனால் மீண்டும் ஒருமுறை தன்னைச் சோக்கர் என நிருபித்து வெளியேறிய அந்த அணியால் பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது.

ஏனெனில் ஒரு கட்டத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் அதே மைதானத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்ட 41வது லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று யாருமே எதிர்பாராத வகையில் கடைசி நேரத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் தொடக்க வீரர் சான்டோ 54 (48) ரன்கள் எடுத்ததால் முதல் 10 ஓவர்களில் 70 ரன்கள் குவித்து நல்ல நிலையில் இருந்தது. அப்போது சடாப் கான் வீசிய 11வது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் அடிக்காமல் தவறவிட்டார்.

- Advertisement -

எவ்ளோ காசு:
அந்த பந்து அவரது காலில் பட்டதால் பாகிஸ்தான் வீரர்கள் அவுட் கேட்ட நிலையில் நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் அது தம்முடைய பேட்டில் பட்டதாக உணர்ந்த சாகிப் ரிவ்யூ எடுத்தார். அதை சோதிக்கப்பட்ட போது காலில் பந்து படுவதற்கு முன்பாகவே பேட்டில் உரசியது அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் தெளிவாக தெரிந்தது. ஆனாலும் 3வது நடுவரும் அவுட் கொடுத்ததால் அதிர்ச்சடைந்த சாகிப் அல் ஹசன் 2 கைகளையும் உயர்த்தி அதிப்ருதியை வெளிப்படுத்தி ஏமாற்றத்துடன் சென்றார். அதை திருப்பு முனையாக மாற்றிய பாகிஸ்தான் அடுத்த 10 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை சாய்த்து இறுதியில் வெற்றி பெற்றது.

ஆனால் அந்த இடத்தில் சரியான முடிவு கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் சாகிப் அல் ஹசன் கூடுதலாக இன்னும் 10 – 20 ரன்கள் எடுத்திருந்தால் கூட 128 ரன்களை துரத்துவதற்கு 19 ஓவர்களை எதிர்கொண்ட பாகிஸ்தான் தோல்வியை சந்திக்க நேரிட்டிருக்கும். அதனால் அந்த நடுவர்களை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதைவிட அதன் காரணமாக களத்தில் இருந்த 2 நடுவர்களுக்கும் 3வது நடுவருக்கும் சேர்த்து சாதகமான தீர்ப்பு வழங்க எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்று பாகிஸ்தானை இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் இப்போட்டில் இந்தியா விளையாடி இருந்தால் பணத்தை வாங்கிக் கொண்டு நடுவர்கள் செயல்பட்டதாக பாகிஸ்தானியர்கள் விமர்சித்திருப்பார்கள். காரணம் இதே உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் இடுப்பளவு மற்றும் ஏற்கனவே பவுன்சர் வீசப்பட்டிருந்ததால் விராட் கோலி கேட்டார் என்பதை விட உண்மை இருந்ததால் நடுவர்கள் நோ-பால் வழங்கினார்கள். ஆனால் அப்போது வேண்டுமென்றே பணத்தை வாங்கிக் கொண்டு இந்தியாவுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதாக சோயப் அக்தர் உட்பட நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் வெளிப்படையாகவே விமர்சித்தார்கள்.

அதிலும் இந்தியாவை அரையிறுதிக்கு தகுதி பெற வைக்க நடுவர்களை வேண்டுமென்றே இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட தூண்டியதாக முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி அப்பட்டமாக விமர்சித்தார். அப்படிப்பட்ட நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடுவர்கள் முடிவுகளை வழங்கியதால் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்று இந்திய ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : வீடியோ : இது எப்டிங்க அவுட்டாகும், அதிர்ந்த சாகிப் – மோசமான அம்பயர்களை திட்டி தீர்க்கும் முன்னாள் வீரர்கள்

அதை விட போட்டி முடிந்த பின் “சாகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது அவுட் தானா?” என்று அந்த பந்தை வீசிய சடாப் கானிடம் வர்ணையாளராக செயல்பட்ட இந்தியாவின் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பினார். அதற்கு “நடுவர் அவுட் கொடுத்து விட்டார். எனவே அவுட் தான்” என்ற வகையில் திமிராக அவர் பதிலளித்ததை பார்த்த இந்திய ரசிகர்கள் “எங்களுக்கு வந்தா ரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா” என்ற கண்ணோட்டத்தில் சமூக வலைதளங்களில் சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement