2023 உலக கோப்பை சான்ஸ் பறி போனதில் தப்பே இல்ல, மொஹாலி மைதானத்தை விளாசும் இந்திய ரசிகர்கள் – நடந்தது என்ன

Mohali Cricket Ground Stadium
- Advertisement -

2023 தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று மதியம் 3.30 மணிக்கு பஞ்சாப் மாநில மொஹாலியில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 191/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பனுக்கா ராஜபக்சா 50 (30) ரன்களும் கேப்டன் ஷிகர் தவான் 40 (29) ரன்களும் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 192 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு மந்திப் சிங் 2, அங்குள் ராய் 4 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற ரகமதுல்லா குர்பாஸ் 22, வெங்கடேஷ் ஐயர் 34, நிதிஷ் ராணா 24, ஆண்ட்ரே ரசல் 35 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்தாலும் அதை பெரிய ரன்களாக மாற்றாமல் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 16 ஓவரில் 146/7 என அந்த அணி தடுமாறிய போது வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தியது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி 7 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த பஞ்சாப் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

- Advertisement -

பறிபோன சான்ஸ்:
முன்னதாக அந்த போட்டியில் பஞ்சாப் பேட்டிங் செய்து முடித்த பின் கொல்கத்தா பேட்டிங் செய்ய களமிறங்கிய போது மொகாலி மைதானத்தில் இருந்த ராட்சத மின்விளக்குகள் திடீரென்று அணைந்து போனது. அதன் காரணமாக 5.15 மணிக்கு துவங்க வேண்டிய கொல்கத்தா இன்னிங்ஸ் சுமார் அரை மணி நேரம் தாமதமாக 5.30 மணிக்கு தான் துவங்கியது. ஆனால் அந்த சமயத்தில் போட்டி சரியான நேரத்தில் துவங்கியிருக்கும் பட்சத்தில் கடைசியில் மழையால் பாதிக்கப்பட்ட 4 ஓவர்களை நிச்சயமாக கொல்கத்தா எதிர்கொண்டிருக்கும்.

அந்த சூழ்நிலையில் சர்துல் தாக்கூர் 8* (3) சுனில் நரேன் 7* (2) என களத்தில் இருந்த 2 வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் மேற்கொண்டு 4 ஓவரில் தேவைப்பட்ட 46 ரன்கள் அடித்து கொல்கத்தாவை வெற்றி பெற வைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அது நடக்காமல் போனதல் இப்போட்டியின் வெற்றி 100% சரிசமமாக இல்லாமல் அமைந்தது. அதற்கு முக்கிய நேரத்தில் மின்விளக்குகள் பழுதாகும் அளவுக்கு பராமரிப்பு வேலைகளில் கவனக் குறைவை காட்டிய மொகாலி மைதானத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகராக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மொகாலி மைதானத்தில் இந்த நிகழ்வு அரங்கேறியதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களே ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். அதை விட வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா முழுவதும் இருக்கும் மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 12 பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.

ஆனால் அந்த 12 மைதானங்களில் மொகாலி ஒன்றாக இல்லாமல் போனது அந்த சமயத்தில் நிறைய இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் 2011 உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய மறக்க முடியாத அரையிறுதி உட்பட பல வரலாற்றுப் போட்டிகளை நடத்திய பெருமை மொகாலி மைதானத்திற்கு உண்டு. அந்த நிலையில் இது போன்ற ஒரு குளறுபடியான நிகழ்வு அரங்கேறியுள்ளதால் அதிருப்தியடையும் ரசிகர்கள் “உங்களுக்கு 2023 உலக கோப்பை போட்டிகளில் நடத்தும் வாய்ப்பு பறிபோனதில் எந்த தவறுமில்லை” என்று தற்போது விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

அது போக இந்தப் போட்டியில் மொகாலி மைதானத்தில் அங்குள்ள உள்ளூர் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான விளம்பரங்களும் இடம் பெற்றிருந்தன. அத்துடன் சிலர் அங்கு நிலவும் அரசியல் ரீதியான பிரச்சனையை மைதானத்தில் எழுப்பியதால் காவல்துறையினரால் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பாதியில் வெளியேற்றப்பட்டனர்.

இதையும் படிங்க:IPL 2023 : நீங்க இப்டி செய்விங்கன்னு எதிர்பாக்கல – தோனியின் 2 கேப்டன்ஷிப் தவறுகளை நேரடியாக விமர்சித்த சேவாக்

அப்படி முழுமையாக போட்டி நடக்கும் அளவுக்கு அனைத்தையும் சரியாக பராமரிக்காமல் விளையாட்டில் அரசியலை கலக்கும் நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்கும் மொஹாலி மைதானத்தில் 2023 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறக்கூடாது என்று நிறைய இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement