இந்தியா என்றால் அவ்வளவு இளக்காரமா? நட்சத்திர ஆஸி வீரரை வெளுக்கும் இந்திய ரசிகர்கள், காரணம் என்ன

Starc-1
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக தங்களது நாட்டில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா சமீபத்தில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு 2 – 1 (3) என்ற கணக்கில் டி20 தொடரை இழந்த நிலையில் அடுத்ததாக தன்னுடைய சொந்த மண்ணில் வலுவான இங்கிலாந்தை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்டது. இருப்பினும் அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் கடைசி ஓவரில் தலா 8 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற அந்த அணி ஆரம்பத்திலேயே கோப்பையை கோட்டை விட்டு சொந்த மண்ணில் கவ்வியது.

அந்த நிலையில் அக்டோபர் 14ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டி மழையால் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோஸ் பட்லர் 65* (41) அதிரடியால் நிர்ணயித்த 113 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா 3.5 ஓவரில் 30/3 என ஆரம்பத்திலேயே திணறிய போது மீண்டும் வந்த மழை போட்டியை ரத்து செய்தது. அதனால் ஒயிட் வாஷ் தோல்வியிலிருந்து ஆஸ்திரேலியா தப்பித்தாலும் 2 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இங்கிலாந்து புத்துணர்ச்சியுடன் உலக கோப்பையில் களமிறங்க தயாராகியுள்ளது.

- Advertisement -

மன்கட் சர்ச்சை:
மறுபுறம் உலக கோப்பை துவங்க ஒருநாள் முன்பாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியுள்ளது அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைய வைத்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துக்கு அதிரடியாக ரன்களை சேர்த்த கேப்டன் ஜோஸ் பட்லர் நட்சத்திர ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் வீசிய 5வது ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெள்ளை கோட்டைத் தாண்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதை கவனித்த ஸ்டார்க் 4வது பந்தை வீசி விட்டு “இப்படியே செய்து கொண்டிருந்தால் ரன் அவுட் செய்து விடுவேன்” என்று கடுமையாக எச்சரித்து அம்பயரிடமும் புகாரளித்தார்.

தற்சமயத்தில் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்கட் என்றழைக்கப்பட்ட இந்த அவுட்டை கடந்த மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா செய்தபோது ஒட்டுமொத்த இங்கிலாந்தும் நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக திட்டித் தீர்த்தது. இருப்பினும் அதிக பவுண்டரிகளை அடித்தோம் என்ற விதிமுறையை காட்டி 2019 உலகக் கோப்பை வென்றதை விட தீப்தி மோசமாக நடந்து கொள்ளவில்லை என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

அந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் இதே ஜோஸ் பட்லரை மன்கட் செய்து கொடுத்த குரலுக்கு செவிசாய்த்த எம்சிசி மற்றும் ஐசிசி அமைப்புகள் அதை அதிகாரபூர்வமாக ரன் அவுட் பிரிவுக்கு மாற்றியும் மீண்டும் திருந்தாத பட்லரை நேற்றைய போட்டிக்குப் பின் நிறைய ரசிகர்கள் கலாய்த்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் “மன்கட் செய்வதற்கு நான் தீப்தி சர்மா கிடையாது. ஆனால் நான் அதை செய்ய முடியும்” என்று ஜோஸ் பட்லருக்கு மிட்செல் ஸ்டார்க் கொடுத்த வார்னிங் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

அதற்கு “வெள்ளைக் கோட்டிலிருந்து நான் வெளியே வரவில்லை” என்று ஜோஸ் பட்லர் அப்பட்டமாக பேசியதும் மைக்கில் பதிவானது. ஆரம்பத்தில் வர்ணனையாளர்கள் பேசியதால் இந்த உரையாடல்கள் ரசிகர்களுக்கு தெளிவாக கேட்காத நிலையில் தற்போது வர்ணனையாளர்கள் பேசாமல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர்கள் பேசிய உரையாடல் தெளிவாக கேட்கிறது.

அதனால் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க்கை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள். குறிப்பாக அந்த இடத்தில் ஒன்று உங்களுக்கு விருப்பப்பட்டால் எச்சரிக்கை கொடுத்ததோடு விட்டிருக்க வேண்டும் அல்லது விதிமுறைக்கு உட்பட்டு மன்கட் ரன் அவுட் செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கும் ரசிகர்கள் தீப்தி சர்மாவின் பெயரை இழுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளதென்று ஸ்டார்க்கை சாடுகிறார்கள்.

மேலும் மன்கட் ரன் அவுட் என்றாலே ரவிச்சந்திரன் அஷ்வின், தீப்தி சர்மா என இந்தியர்கள் தான் உங்களது நினைவுக்கு வருவார்களா என்றும் ரசிகர்கள் விளாசுகின்றனர். அத்துடன் இந்தியர்கள் ஒன்றும் மேத்தியூ வேட் போல் பீல்டிங் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியும், ஸ்டீவ் ஸ்மித் போல சீட்டிங் செய்தும் வெற்றி பெறவில்லை என்று கூறும் ரசிகர்கள் ஸ்டார்க் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சாடிகிறார்கள். மேலும் நாங்கள் அடிப்படை விதிமுறைக்கு குரல் கொடுத்து அதில் வெற்றி கண்டவர்கள் என்று சரமாரியாக ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்குகிறார்கள்.

Advertisement