- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விதிமுறையை மீறி இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்து கொண்ட இலங்கை அம்பயர்.. இந்திய ரசிகர்கள் விளாசல்

இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையின் கடைசிப் போட்டி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் துவங்கிய கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நங்கூரமாக விளையாடிய ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது மழை வந்தது.

- Advertisement -

தர்மசேனாவின் சிக்னல்:

அதனால் முதல் நாள் உணவு இடைவெளியில் இந்தியா 72/2 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் டாங் வீசிய 13வது ஓவரின் ஒரு இன்ஸ்விங் யாக்ர்கர் பந்தை சாய் சுதர்சன் எதிர்கொண்டு கீழே விழுந்தார். அப்போது எல்பிடபிள்யூ இருக்குமோ என்று நினைத்த இங்கிலாந்து அணியினர் அனைவரும் சேர்ந்து நடுவரிடம் தர்மசேனாவிடம் அவுட் கேட்டார்கள்.

பொதுவாக அது போன்ற சூழ்நிலையில் நடுவர்கள் அவுட் வழங்குவார்கள் அல்லது இல்லையென்று தலையசைப்பார்கள் அல்லது அமைதி காப்பார்கள் அல்லது ரிவியூ எடுக்கும் 15 நொடிகள் வரை அமைதியாக இருப்பார்கள். அதுவே ஐசிசி விதிமுறையாகவும் இருந்து வருகிறது. ஆனால் அதையெல்லாம் செய்யாத இலங்கையை சேர்ந்த அம்பையர் குமார் தர்மசேனா தலையை அசைத்துக் கொண்டே இன்சைட் எட்ஜ் பட்டதாக கையில் செய்கை காட்டினார்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:

அதனால் சுதாரித்துக் கொண்ட இங்கிலாந்து வீரர்கள் ரிவ்யூ எடுக்காமல் விட்டனர். அதைத் தொடர்ந்து காண்பிக்கப்பட்ட ரிப்ளையில் தர்மசேனா சொன்னது போலவே பந்து முதலில் சாய் சுதர்சன் பேட்டில் பட்டது தெரிந்தது. அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் விதிமுறையை மீறி இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்து கொண்ட தர்மசேனாவை சமூக வலைதளங்களில் விளாசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: 735 ரன்ஸ்.. கவாஸ்கரின் 47 வருட சாதனையை உடைத்த கில்.. விமர்சித்த வாய்களை பாராட்ட வைக்கும் சரித்திர சாதனை

ஏனெனில் அவர் அந்த சிக்னலை கொடுக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை இங்கிலாந்து ரிவியூ எடுத்திருக்கும். கடந்த போட்டியில் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து 3 ரிவியூக்களையும் தவறாக எடுத்து இழந்தது. அதே போல அந்த ரிவ்யூவையும் இங்கிலாந்து இழந்திருக்கும். அதனால் குறைந்தபட்சம் 15 நொடிகள் அமைதியாக இல்லாமல் இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்து கொண்ட அவரை இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -