இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனில் துவங்கியது. அத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் துவங்கிய கடைசிப் போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியது.
இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த சுதர்சன் நிதானத்தை காட்டிய நிலையில் எதிர்புறம் நங்கூரமாக விளையாடிய ராகுல் 14 ரன்னில் ஓக்ஸ் வேகத்தில் இன்சைடு எட்ஜ்ஜாகி போல்டானார்.
கவாஸ்கரை முந்திய கில்:
அடுத்ததாக வந்த கேப்டன் சுப்மன் கில் நிதானமாக விளையாடி சுமாரான பந்துகளை அடித்து ஆடினார். அப்போது மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டு உணவு இடைவெளி அறிவிக்கப்பட்டது. முதல் நாள் உணவு இடைவெளியில் 72/2 ரன்களை எடுத்துள்ள இந்தியாவுக்கு களத்தில் கேப்டன் கில் 15*, சுதர்சன் 25* ரன்களுடன் உள்ளார்கள்.
இந்த 15 ரன்களையும் சேர்த்து இத்தொடரின் 5 போட்டிகளில் சுப்மன் கில் 735* ரன்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை உடைத்துள்ள கில் புதிய சரித்திர சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 1978ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற தொடரில் இந்திய கேப்டனாக கவாஸ்கர் 732 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
புதிய கேப்டன் புதிய சாதனை:
47 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த அந்த சாதனையை தற்போது கில் உடைத்துள்ளார். இத்தனைக்கும் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடியதால் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது கில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே தகுதியற்றவர் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் முதல் தொடரிலேயே கவாஸ்கரின் மாபெரும் சாதனையை உடைத்துள்ள கில் தன்னை விமர்சித்த வாய்களைப் பாராட்ட வைத்துள்ளார்.
இதையும் படிங்க: இது நடந்துச்சுன்னா இதுக்கு மேலயும் கம்பீரை இந்திய ரசிகர்கள் வீட்டுக்கு அனுப்பாம விடமாட்டாங்க.. ஆதர்டன் பேட்டி
அத்துடன் இந்திய அணியை தலைமைத் தலைமைத் தாங்க தாம் சரியானவன் என்பதையும் கில் நிரூபித்துள்ளார். இதை அடுத்து இந்தப் போட்டியில் இந்தியா தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து 400 ரன்களை அடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு ஓரிரு இந்திய பேட்ஸ்மேன்கள் சதத்தை அடிப்பது அவசியமாவது குறிப்பிடத்தக்கது.



