இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே செப்டம்பர் 20 ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமின்றி (1-0) என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.

அதன்படி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 71 ரன்களையும், ராகுல் 55 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 19.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரீன் 61 ரன்கள், மேத்யூ வேட் 45 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்வி தற்போது ரசிகர்களை பெரிதும் வருத்தம் அடையச் செய்துள்ளது. மேலும் டி20 உலக கோப்பை எதிரில் வரும் வேளையில் இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு எதிராக ரசிகர்கள் தற்போது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் இது குறித்து ரசிகர்கள் பதிவிட்டுள்ள சில கருத்துகளில் 208 ரன்கள் அடித்தும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இவ்வளவு பெரிய இலக்கினை வைத்து கூட எதிரணியை பந்துவீச்சில் சுருட்ட முடியவில்லை என்றால் உலகக் கோப்பையை எவ்வாறு வெல்ல முடியும் என்று ரசிகர்கள் தங்களது வருத்தங்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : IND vs AUS : 208 ரன்கள் அடித்தும் உதைவாங்கிய இந்தியா – தோல்விக்கான இந்த காரணங்களை கவனித்தீர்களா
ரசிகர்கள் கூறுவது போலவே இந்த போட்டியில் டெத் ஓவர்களில் இந்திய அணி அதிக அளவு ரன்களை பவுண்டரிகள் வாயிலாக கசிய விட்டதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



