- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதே ரூல்ஸ் வெச்சு நியூஸியிடம் 2 ஏமாற்றம் செஞ்சு.. 2019 உ.கோ பறித்ததை விடாவா மோசம்.. இந்திய ரசிகர்கள் பதிலடி

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணியை மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து தோற்கடித்தது. இருப்பினும் நான்காவது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா கடைசிப் போட்டிக்கு முன்னதாகவே 3 – 1* என்ற கணக்கில் இத்தொடரை வென்றுள்ளது.

முன்னதாக அந்தப் போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்த இந்திய வீரர் சிவம் துபே கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் தலையில் பவுன்சர் பந்தில் காயத்தை சந்தித்தார். அவரை சோதித்த இந்திய அணியின் மருத்துவர் எந்தப் பிரச்சனையுமில்லை என்று சொன்னதால் தொடர்ந்து விளையாடிய துபே கடைசி பந்தில் அவுட்டானார். அடுத்ததாக இங்கிலாந்து பேட்டிங் செய்த போது சப்ஸ்டிடியூட் விதிமுறையைப் பயன்படுத்திய இந்தியா அவருக்குப் பதில் ஹர்ஷித் ராணாவை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

இங்கிலாந்தின் விமர்சனம்:

அந்த வாய்ப்பில் 3 விக்கெட்டுகளை எடுத்த ராணா தனது அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் ஐசிசி விதிமுறைப்படி பேட்ஸ்மேன் விலகினால் மற்றொரு பேட்ஸ்மேன், பவுலர் விலகினால் மற்றொரு பவுலர் விளையாட வேண்டும். அதன் படி ஆல் ரவுண்டர் துபேவுக்கு பதில் பவுலரான ராணாவை இந்தியா தேர்ந்தெடுத்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விமர்சித்தார்.

மேலும் இது பைத்தியக்காரத்தனமான முடிவு என அலெஸ்டர் குக், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்களும் அந்த முடிவை விமர்சித்தார்கள். இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் 2019 உலகக்கோப்பை நினைவில்லையா? என்று அவர்களுக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கிறார்கள். ஏனெனில் 2019 உலகக் கோப்பை ஃபைனலில் கப்டில் வீசிய பந்து தவறுதலாக பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:

அதற்கு முன்பாக அவர் 2 ரன்கள் எடுத்தார். அப்போது உண்மையான விதிமுறைப்படி 4 ரன்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் விதிமுறை தெரியாத இலங்கையின் நடுவர் குமார் தர்மசேனா 6 ரன்கள் வழங்கினார். கடைசியில் அந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்த போது அதிக பவுண்டரி அடித்தார்கள் என்ற முட்டாள்தனமான விதிமுறையை வைத்து நியூசிலாந்து தோற்காத போதும் கோப்பை இங்கிலாந்துக்கு கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: எனக்குன்னு ஸ்பெஷல்லா எதுவும் வேணாம்.. நானும் நார்மல் பிளேயர் தான் – பெரிய மனசை காட்டிய விராட் கோலி

அங்கே விதிமுறையும் நியாயமும் சரியாக பின்பற்றப்படவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இங்கே போட்டி நடுவர் அனுமதியுடன் தான் துபேவுக்கு பதிலாக ராணாவை இந்தியா பயன்படுத்தியது. எனவே 2 விஷயங்களில் நியூசிலாந்தை ஏமாற்றி 2019 உலகக்கோப்பையை வென்றதை விட இந்தியா செய்தது மோசமில்லை என்று இங்கிலாந்துக்கு ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

- Advertisement -