என்ன? இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடிக்காததுக்கு பி.சி.சி.ஐ காரணமா? – ரசிகர்கள் கண்டனம்

BCCI
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். இதுவரை 70 சதம் அடித்துள்ள அவர் தனது 72-வது சதத்திற்காக நீண்ட நாட்களாகவே காத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சதம் அடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியின்போது கோலி சதம் அடிக்க தவறினார்.

kohli

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது பெங்களூர் டெஸ்டிலாவது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்தப் போட்டியிலும் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடிக்காததற்கு பிசிசிஐ தான் காரணம் என்று ரசிகர்கள் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளனர்.

அதன்படி பெங்களூர் மைதானம் எப்போதுமே டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக இருந்து வந்தது. முதல் மூன்று நாட்கள் வேகப்பந்து வீச்சுக்கு மட்டும் ஓரளவு ஒத்துழைக்கும் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காது. ஆனால் இந்த போட்டியில் மைதானம் முற்றிலும் பந்துவீச்சுக்கு மட்டுமே ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

kohli 1

பேட்ஸ்மேன்கள் இந்த மைதானத்தில் ரன் குவிக்க தடுமாறி வருவதை இரண்டு இன்னிங்சிலும் நாம் பார்த்தோம் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்திலேயே கிட்டத்தட்ட 16 விக்கெட்டுகள் மைதானத்தில் விழுந்துள்ளதால் இது போன்று முற்றிலும் பவுலிங் பிச்சை ஏன் தயார்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

மேலும் விராட் கோலி சதம் அடிக்க கூடாது என்றும், அதை நீங்கள் தாமதம் செய்து அவர் மீது அழுத்தத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே இதேபோன்று செய்கிறீர்களா? என்று பிசிசிஐ மீது ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்தது மட்டுமின்றி கண்டனத்தையும் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : புதிய ஜெர்ஸியை வெளியிட்ட மும்பை – டெல்லி! இரண்டுல எது சூப்பர்னு சொல்லுங்க?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 252 ரன்களை குவித்தது. அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் மட்டுமே குவித்து 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement