- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸியின் அந்த சீட்டிங்கை விட மோசமில்ல.. விராட் கோலியை அவமதித்த பத்திரிகைக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72, சாம் கோன்ஸ்டஸ் 60 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 19 வயதாகும் இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாக அட்டகாசமாக விளையாடினார். குறிப்பாக பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து சிக்ஸர் அடித்த அவர் ஒரே ஓவரில் 18 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

- Advertisement -

மோசமான விமர்சனம்:

அந்த வகையில் இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்த அவருடைய தோளில் 10வது ஓவரின் முடிவில் விராட் கோலி இடித்தார். அதற்காக ஐசிசி அவருக்கு 20% போட்டி சம்பளத்தை அபராதமாகவும் விதித்தது. ஆனால் தங்களுடைய நாட்டைச் சேர்ந்த இளம் வீரரை வேண்டுமென்றே இடித்து தள்ளிய விராட் கோலியை மேற்கு ஆஸ்திரேலியா பத்திரிக்கை முகப்பு பக்கத்தில் கோமாளியை போல் சித்தரித்து மோசமாக விமர்சித்துள்ளது.

அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் காலம் காலமாக சீட்டிங் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் நீங்கள் விராட் கோலியை இப்படி சித்தரிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக 2018ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஃபான்கிராப்ட் ஆகியோர் உப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தினார்கள். அப்படி குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக பந்தை சேதப்படுத்திய அவர்களுக்கு ஆஸ்திரேலிய வாரியமே தடை விதித்தது.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:

மறுபுறம் இங்கே தம்முடைய அணிக்கு பின்னடைவை கொடுத்த வீரர் மீது தைரியமாக விராட் கோலி நேருக்கு நேராக மோதினார். அப்படி தன்னுடைய தாய் நாட்டுக்காக விராட் கோலி அவ்வாறு செய்ததை நியாயப்படுத்த முடியாது என்பது உண்மையாகும். ஆனால் கோமாளி என்ற சித்தரிக்கும் அளவுக்கு விராட் கோலி எதுவும் தவறாக செய்யவில்லை என்பது நிதர்சனமாகும்.

இதையும் படிங்க: ஆஸி 299/6 டூ 474 ரன்ஸ்.. இந்தியாவை புரட்டுவதில் சச்சின், கோலியை முந்தி ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை

குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் பந்தை சேதப்படுத்தியதை விட விராட் கோலி செய்தது மோசமில்லை என்று இந்திய ரசிகர்கள் அந்த பத்திரிக்கைக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதே போல ரவி சாஸ்திரி போன்ற சில முன்னாள் இந்திய வீரர்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அப்படி மோசமாக சித்தரித்த ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலி இப்போட்டியில் பேட்டால் பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

- Advertisement -