IND vs NZ : தயவு செஞ்சு இவர ட்ராப் பண்ணி அங்க அனுப்புங்க – தோல்வியை கொடுத்த இளம் வீரரை விளாசும் இந்திய ரசிகர்கள்

Arshdeep-and-Pandya
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி விளையாடும் நிலையில் ஜனவரி 27ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து 20 ஓவரில் 176/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் பின் ஆலன் 35 (23) ரன்களும் டேவோன் கான்வே 52 (35) ரன்களும் எடுக்க கடைசி நேரத்தில் டார்ல் மிட்சேல் 59* (30) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 177 ரன்களைத் துரத்திய இந்தியாவுக்கு இசான் கிசான் 4, ராகுல் திரிபாதி 0, சுப்மன் கில் 7 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 15/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய சூரியகுமார் யாதவ் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 47 (34) ரன்களும் ஹர்டிக் பாண்டியா 21 (20) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

வீட்டுக்கு அனுப்புங்க:
கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50 (28) ரன்கள் எடுத்து போராடியும் தீபக் ஹூடா 10, சிவம் மாவி 2 என அடுத்து வந்த வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் 20 ஓவர்களில் 155/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதனால் சிறப்பான வெற்றி பெற்ற நியூசிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் ஆரம்பம் முதலே பாண்டியா உட்பட வேகப்பந்து வீச்சாளர்கள் ரங்களை வாரி வழங்கினாலும் வாஷிங்டன் சுந்தர் போன்ற ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி நியூசிலாந்தை கட்டுக்குள் வைத்திருந்தனர்.

சொல்லப்போனால் 19வது ஓவரில் 149/6 என்ற நிலையில் இருந்த நியூசிலாந்துக்கு கடைசி ஓவரை வீசிய அர்ஷிதீப் சிங் முதல் பந்திலேயே நோ-பால் போட்டு சிக்ஸர் கொடுத்தார். அதை பயன்படுத்திய டார்ல் மிட்சேல் அடுத்த 2 பந்துகளிலும் சிக்ஸர்களை அடித்து ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டார். அத்துடன் 4, 0, 2, 2 என மோசமாக பந்து வீசிய அர்ஷிதீப் சிங்கை அடித்து நொறுக்கிய அவர் கடைசி ஓவரில் மட்டும் 26 ரன்களை அடித்தார்.

- Advertisement -

இறுதியில் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதிலிருந்தே தோல்விக்கு அர்ஷிதீப் சிங் தான் காரணம் என்பது தெளிவாக தெரிவதாக தெரிவிக்கும் ரசிகர்கள் தயவு செய்து இவரை உள்ளூர் கிரிக்கெட்டுக்கு அனுப்புமாறு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஏனெனில் இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் அதன் பின் எவ்விதமான உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாமல் லேசான காயத்தை சந்தித்து சமீபத்திய இலங்கை டி20 தொடரில் களமிறங்கினார்.

அதில் ஒரு போட்டியில் ஹாட்ரிக் நோ-பால்களை வீசி மொத்தமாக 5 நோ-பால்களை போட்ட அவர் படுமோசமான உலக சாதனையை படைத்து இந்தியாவின் வெற்றியையும் தாரை பார்த்தார். இந்தியாவுக்காக விளையாடாத சமயங்களில் சூரியகுமார் யாதவ் போல ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடாமல் இருந்து விட்டு லேசான காயத்துடன் நீண்ட நாட்கள் கழித்து களமிறங்கியதே அவர் ரிதத்தை இழந்து நோ-பால் வீசியதற்கு காரணமாக அமைந்ததாக கௌதம் கம்பீர், சபா கரீம் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இதையும் படிங்க: IND vs NZ : பேட்டிங், பந்து வீச்சில் முழு மூச்சுடன் போராடிய வாஷிங்டன் சுந்தர் – இந்தியாவின் தோல்விக்கான காரணம் இதோ

ஆனால் மீண்டும் அதை காதில் போட்டுக் கொள்ளாத அவர் கடந்த 2 வாரமாக எவ்விதமான உள்ளூர் தொடர்களிலும் விளையாடாமல் இத்தொடரில் மோசமாக களமிறங்கி மீண்டும் இந்தியாவின் வெற்றியை தாரை வார்த்துள்ளார். அதனால் கொதிக்கும் ரசிகர்கள் இவரை வீட்டுக்கு அனுப்பி உள்ளூர் கிரிக்கெட்டுக்கு விளையாடி பார்முக்கு திரும்பிய பின் இந்திய அணியில் சேர்க்குமாறு கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement