ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி தோல்வியையே சந்திக்காமல் வெற்றி கண்ட இந்திய அணியானது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பையை தவற விட்டு வரும் இந்திய அணி இம்முறை நிச்சயம் கோப்பையுடன் நாடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்களும் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.
ஒருபுறம் இந்த டி20 உலக கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இவ்வேளையில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கல் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்து அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜூலை 6 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான இந்திய அணியை சுப்மன் கில் கேப்டனாக வழிநடத்த இருக்கிறார்.
அதோடு அறிவிக்கப்பட்டுள்ள இந்த இந்திய அணியின் 4 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் சர்மா, ரியான் பராக், நித்திஷ் ரெட்டி மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ப்ளீஸ் நீங்க இதை செய்ஞ்சாலே போதும்.. விராட் கோலிக்கு அன்புக்கட்டளை போடும் ரசிகர்கள் – விவரம் இதோ
மேலும் இந்த அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா, பாண்டியா என ஒரு சீனியர் வீரருக்கு கூட இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருந்தும் பி.சி.சி.ஐ கேப்டன்சியை சுப்மன் கில்லுக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



