இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட திறமைசாலி. இது என்ன நியாயம் – ரசிகர்கள் கொந்தளிப்பு

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றோடு வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக வரும் 17ஆம் தேதி துவங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்திய வீரர்கள் இந்த தொடருக்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த டி20 தொடர் முடிந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

INDvsNZ

- Advertisement -

அதில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேளையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு யாதெனில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கிடைக்காதது தான். ஏனெனில் டெஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே இந்திய அணியில் விளையாடி வரும் விகாரி அறிமுகமானதிலிருந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமான அவர் கடந்த ஆஸ்திரேலிய பயணத்திலும் சிறப்பாக விளையாடினார்.

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அருமையாக பயன்படுத்திய விகாரி இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் 4 அரைசதங்கள் உடன் 624 ரன்களை அடித்துள்ளார். எப்போதெல்லாம் இந்திய அணிக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதோ அப்போதெல்லாம் அணியை தாங்கிப் பிடித்து உள்ளார். குறிப்பாக 2020-21 ஆஸ்திரேலிய தொடரின் போது சிட்னி டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் போது அஸ்வினுடன் இணைந்து காயத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்.

vihari

அவரது இந்த ஆட்டம் காரணமாக இந்திய அணி அந்த போட்டியை டிரா செய்தது மட்டுமின்றி அந்த தொடரையும் வென்று இருந்தது. அதுதான் அவர் கடைசியாக விளையாடிய தொடர் அதன் பின்னர் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து தொடர், இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் என அவருக்கு எந்த தொடரிலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. திறமையான பேட்ஸ்மேனாக இருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது வருத்தம் அளித்தாலும் தற்போது இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து அவர் ஓரம் கட்டப்பட்டு உள்ளது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போன நியூசி வீரர் – மாற்றுவீரர் அறிவிப்பு

இதன் காரணமாக விகாரியை புறக்கணிக்க காரணம் என்ன ? என்று ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூகவலைதளத்தின் மூலம் முன்வைத்து வருகின்றனர். மேலும் இவரின் புறக்கணிப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement