டி20 உலகக்கோப்பை : இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போன நியூசி வீரர் – மாற்றுவீரர் அறிவிப்பு

NZ
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதனைத்தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

nzvsaus

- Advertisement -

இதன் காரணமாக நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரை டி20 உலக கோப்பையை கைப்பற்றியதில்லை என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் முக்கியமான இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டேவன் கான்வே விளையாடமாட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

conway 1

ஏனெனில் அரையிறுதிப் போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய கான்வே தான் ஆட்டமிழந்த விரக்தியில் பேட்டை கையால் ஓங்கி குத்தினார். இதன் காரணமாக ஏற்பட்ட காயத்தில் அவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் அற்புதமான வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : இப்படி ஒரு மட்டமான பாலை பாத்திருக்க முடியாது. அதிலும் சிக்ஸ் அடித்த வார்னர் – என்னங்க இது

இதன் காரணமாக அவருக்கு பதிலாக டிம் சைஃபெர்ட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. டி20 தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவன் கான்வே விலகல் நியூஸிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவு என்றே கூறலாம்.

Advertisement