அம்பயர் விருது கொடுங்க – பாபர் அசாமை உயர்த்தி விராட் கோலியை கலாய்க்கும் பாக் ரசிகர்கள் – இந்திய ரசிகர்கள் பதிலடி

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

2022 காலண்டர் வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கௌரவித்து வருகிறது. அதில் முதலாவதாக 2022ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய கனவு அணியை ஐசிசி வெளியிட்டது. அதில் டி20 அணியில் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி ஆகியோரும் ஒருநாள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகியோரும் டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். அதைத்தொடர்ந்து தற்போது தனிநபர் விருதுகளை ஐசிசி அறிவித்து வருகிறது.

அதில் அதிக ரன்களை குவித்து அதிக சிக்ஸர்களை பறக்க விட்டு டி20 பேட்டிங் துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய சூரியகுமார் யாதவ் 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சொல்லப்போனால் இந்த விருதை வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்த அவர் ஏற்கனவே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்து வருகிறார். இந்நிலையில் இந்த விருது பட்டியலில் உச்சகட்ட விருதான 2022ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வென்றுள்ளார்.

- Advertisement -

மமதையில் பாக் ரசிகர்கள்:
டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து கடந்த வருடம் 15 அரை சாதங்கள் 8 சதங்கள் உட்பட 2598 ரன்களை 54.12 என்ற சிறப்பான சராசரியில் குவித்த அவர் உலக அளவில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்த விருதை வென்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கேர்பீல்டு சோபர்ஸ் அவர்களது பெயரில் வழங்கப்படும் இந்த விருதுடன் ஒருநாள் போட்டிகளில் 679 ரன்களை 84.87 என்ற அபாரமான சராசரியில் எடுத்த அவர் 2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் வென்றுள்ளார். அப்படி அவர் 2 விருதுகளை வென்றுள்ள நிலையில் இந்தியா சார்பில் சூரியகுமார் மட்டுமே ஆடவர் தனி நபர் விருதில் விருது வென்றுள்ளார்.

அந்த மமதையில் வழக்கம் போல இந்தியாவை கிண்டலடிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் வேண்டுமானால் எப்போதும் அழுத்தமற்ற பிளாட்டான பிட்ச்களை கொண்ட போட்டிகளில் கத்துக்குட்டிகளை அடித்து காலத்தை தள்ளி வரும் விராட் கோலிக்கு 2022ஆம் ஆண்டின் சிறந்த அம்பையர் விருதை கொடுக்கலாம் என்று கலாய்க்கிறார்கள். குறிப்பாக 2022 டி20 உலக கோப்பையில் இடுப்புக்கு மேலே வந்த பந்தை சிக்சர் அடித்து விட்டு அம்பயரை கைக்குள் போட்டு வேண்டுமென்றே நோபால் கேட்டதுடன் பிரீ ஹிட்டில் போல்ட்டான பின் விதிமுறைகளை மீறி ரன்களை எடுத்த விராட் கோலி அந்த விருதுக்கு தகுதியானவர் என்றும் அந்நாட்டவர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

ஆனால் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் வென்று விட்டதால் அதுவும் உங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் கிண்டலடிக்கிறார்கள். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் எங்களது விராட் கோலி அதே உலகக் கோப்பையில் உங்களை தோற்கடித்தது அதற்குள் மறந்து விட்டதா என்று பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் 2 விருதுகளை வென்றுள்ள பாபர் அசாம் கடந்த வருடம் உங்களது சொந்த மண்ணில் எத்தனை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்? என்றும் நெத்தியடி பதிலை இந்திய ரசிகர்கள் கொடுக்கிறார்கள்.

அப்படி சுயநலத்துடன் விளையாடி விருதுகளை வாங்கும் பாபர் அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த பாகிஸ்தான் சேர்ந்தாலும் விராட் கோலியை நெருங்க முடியாது என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். ஏனெனில் வரலாற்றில் உலகிலேயே அதிகபட்சமாக விராட் கோலி 9து ஐசிசி விருதுகளை வென்றுள்ளார். ஆனால் வரலாற்றில் ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்கள் சேர்ந்து 8 ஐசிசி விருதுகளை மட்டும் வென்றுள்ளனர்.

இதையும் படிங்க: கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி தம்பதிக்கு விராட் கோலி அளித்த திருமண பரிசு – என்ன தெரியுமா?

எனவே பாபர் அசாம் வெறும் 2 விருதுகளை வென்றதால் “அர்ப்பணுக்கு வாழ்வு வந்தது” போல் எங்களது விராட் கோலியை கிண்டலடிப்பதை விட்டுவிட்டு முதலில் உங்களது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கான வேலையை பாருங்கள் என்றும் இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement