வரவே வேண்டாம் – ஜிம்பாப்வே மேட்ச் நியாபகம் இருக்கா? ரமீஸ் ராஜாவுக்கு இந்திய ரசிகர்கள் ஆதாரத்துடன் மாஸ் பதிலடி

Ramiz Raja IND vs Pak
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா முதல் போட்டியிலே பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலகக்கோப்பைகளில் மட்டும் மோதுகின்றன. அந்த வகையில் இந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் மோதிய இவ்விரு அணிகளும் அடுத்ததாக 2023இல் மோதுவது கேள்விக்குறியுள்ளது.

ஏனெனில் வரலாற்றின் 16வது ஆசியக் கோப்பையை தங்கள் நாட்டில் நடத்தும் உரிமையை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் தலைவர் ஜெய் ஷா தலைமையில் இதர நாடுகள் ஆதரவுடன் பாகிஸ்தான் வாங்கியுள்ளது. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு பயணித்து 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்போம் என்று கடந்த மாதம் தெரிவித்தார்.

- Advertisement -

வரவே வேண்டாம்:
அதற்கு ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் நீங்கள் எங்களிடம் கலந்தாலோசிக்காமல் இப்படி பேசியது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்குள் நீங்கள் வராமல் போனால் அதே 2023இல் உங்கள் நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்கள் வரமாட்டோம் என்று பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் ஆசிய கோப்பையில் பங்கேற்க தங்கள் நாட்டுக்கு வந்தால் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்று அதன் தலைவர் ரமீஸ் ராஜா நேற்று அறிவித்துள்ளார்.

அதை விட கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையிலும் 2022 ஆசிய கோப்பையிலும் மில்லியன் டாலர் இந்திய அணியை தோற்கடித்து ஆஸ்திரேலியாவின் நடைபெற்ற உலகக் கோப்பை ஃபைனல் வரை சென்று அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் 2023 உலக கோப்பையில் பங்கேற்காமல் போனால் அதை யார் பார்ப்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதனால் நஷ்டம் இந்தியாவுக்கு தான் என்று அவர் பேசியதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் நீங்கள் வரவே வேண்டாம் யார் உங்களை அழைத்தார்கள் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

1. அத்துடன் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் கத்துக்குட்டியான ஜிம்பாப்வேவை மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா எதிர்கொண்ட போட்டிக்கு 82,507 ரசிகர்கள் வந்து சப்போர்ட் செய்த ஆதாரத்தை நீட்டும் இந்திய ரசிகர்கள் அதே மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதிய மாபெரும் ஃபைனலுக்கு 80,462 ரசிகர்கள் மட்டுமே ஆதரவு கொடுத்ததாக பதிலடி கொடுக்கிறார்கள்.

2. அப்படி வெளிநாட்டில் ஃபைனலை விட இந்தியா பங்கேற்ற சாதாரண லீக் போட்டிக்கு அவ்வளவு ஆதரவு கிடைத்த நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு மும்மடங்கு ஆதரவு கிடைக்கும் என்றும் இந்திய ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

- Advertisement -

3. மேலும் எங்களது நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையில் உங்களை தவிர்த்து எஞ்சிய அனைத்து நாடுகளும் அமோக ஆதரவு கொடுக்கும் என தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் யாருமே ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் 120 கோடி இந்திய மக்கள் பார்த்து வெற்றி பெற வைப்பார்கள் என்று மாஸ் பதிலடி கொடுக்கிறார்கள்.

4. அத்துடன் 1990 முதல் 30 வருடங்களாக எங்களிடம் தோற்று விட்டு 2021இல் பதிவு செய்த ஒரு வெற்றியை தம்பட்டம் அடிக்கும் நீங்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையிடம் 2022 ஆசிய கோப்பையில் 3 நாட்களில் 2 போட்டியில் தோற்றத்தை மறந்து விடாதீர்கள் என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

முன்னதாக சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை விட அதிக வருமானத்தை ஈட்டும் பிசிசிஐ ஆசிய கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை இலங்கை போன்ற நாடுகளைப் போல் பங்கு போடாமல் ஆசிய கவுன்சிலுக்கே நிதி கொடுக்கும் நாடாக உள்ளது. அதனால் பிசிசிஐ முடிவெடுத்து விட்டால் அதை பாகிஸ்தான் தடுக்க முடியாது என்பதுடன் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்காமல் போனால் அதற்காக ஐசிசியிடம் கிடைக்கும் பங்கு பணமும் கிடைக்காது. மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் இழப்பு பாகிஸ்தானுக்கே தவிர இந்தியாவுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement