6 – 0.. அப்படியே இதையும் காட்டுங்க.. விராட் கோலியை கலாய்த்த மைக்கேல் வாகனுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

Micheal Vaughan 2
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டுள்ளது. ஏனெனில் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வரும் அவர் இதுவரை 12,000 மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். எனவே தற்போது 33 வயதாகும் அவர் அடுத்த 4 வருடங்களில் 4000 ரன்கள் குவித்து சச்சினின் (15921) உலக சாதனையை உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டரில் விராட் கோலி மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் டெஸ்ட் புள்ளிவிவரங்களை பதிவிட்டு இந்திய ரசிகர்களை கலாய்த்துள்ளார். அதாவது விராட் கோலி இதுவரை 191 இன்னிங்ஸில் 29 சதங்கள் 30 அரை சதங்கள் 26 சிக்ஸர்கள் உட்பட 8848 ரன்களை 49.15 என்ற சராசரியில் 55.57 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளார்.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:

ஆனால் ஜோ ரூட் 263 இன்னிங்ஸில் 32 சதங்கள் 64 அரை சதங்கள் 44 சிக்ஸர்கள் உட்பட 12131 ரன்களை 50.33 என்ற சராசரியில் 56.70 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளதார். எனவே விராட் கோலியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களுடைய ஜோ ரூட் தான் மகத்தான பேட்ஸ்மேன் என்ற வகையில் மைக்கேல் வாகன் கிண்டலடித்துள்ளார். அதற்கு இந்திய ரசிகர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதாவது ஜோ ரூட் இதுவரை மொத்தம் அடித்துள்ள 33 சதங்களில் தன்னுடைய சொந்த மண்ணுக்கு வெளியே வெறும் 13 சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் விராட் கோலி இதுவரை அடித்துள்ள 29 சதங்களில் 15 சதங்களை இந்தியாவுக்கு வெளியே அடித்துள்ளார். அத்துடன் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி 6 சதங்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

கம்பேர் பண்ணாதீங்க:

மறுபுறம் இங்கிலாந்தின் ஜாம்பவானாக மைக்கேல் வாகன் கொண்டாடும் ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் இதுவரை தனது கேரியரில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. அத்துடன் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தடுமாறும் ஜோ ரூட் மொத்தமாக தனது கேரியரில் 49 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் 80 சதஙகள் குவித்து ஆல் ஃபார்மட் நாயகனாக ஜொலித்து வருகிறார்.

இதையும் படிங்க: அதுக்காக ஆஸி தொடருக்கு நடராஜன் மாதிரி பவுலர்களை ரெடியா வெச்சுக்கோங்க.. பரத் அருண் அட்வைஸ்

எனவே சொந்த மண்ணுக்கு வெளியே சுமாராக விளையாடும் ஜோ ரூட்டின் புள்ளிவிவரங்களையும் காட்டுங்கள் என்று மைக்கேல் வாகனுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். மேலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் புள்ளிவிவரங்கள் என்ன? என்று அவரிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே ரூட்டை எப்போதும் கிங் கோலியுடன் கம்பேர் செய்யாதீர்கள் என்றும் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement