- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காப்பியடித்து விட்டு இந்தியா, பாண்டியா, டிகேவை கலாய்த்த பாகிஸ்தான் கேப்டன்.. ரசிகர்கள் பதிலடி

ஹாங்காங் நாட்டில் நடைபெற்ற 2025 சிக்ஸஸ் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டியில் குவைத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அதை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஐசிசி உலகக் கோப்பை வென்றது போல் கொண்டாடி வருகிறார்கள். அதோடு நிற்காத அவர்கள் தேவையின்றி இந்தியாவை சமூக வலைதளங்களில் வம்பிழுத்து வருகின்றார்கள்.

குறிப்பாக இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தானில் லீக் சுற்றில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது. அப்போது “ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் வேடிக்கையான துவக்கம் கிடைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி” என்று தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். ஆனால் அதைத் தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது.

- Advertisement -

கலாய்க்கும் பாகிஸ்தானியர்கள்:

அதை குத்திக்காட்டும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஷஷாத் ட்விட்டரில். “ஹாங்காங் தொடர் வேடிக்கையாக முடிந்துள்ளது. வழக்கம் போல (வெற்றி) பிஸ்னஸ் முடிந்துள்ளது. எங்களிடம் உண்மையான கோப்பை இருக்கிறது” என்று பதிவிட்டு தினேஷ் கார்த்திக்கை வம்பிழுத்துள்ளார். அதாவது இந்தியா லீக் சுற்றுடன் தோற்று வெறுங்கையுடன் வெளியேறிய நிலையில் பாகிஸ்தான் கோப்பையை வென்றுள்ளதாக அவர் இந்தியாவை கலாய்த்துள்ளார்.

அத்துடன் பிட்ச்சில் கோப்பையை வைத்து “இதோ பாருங்கள் கோப்பை” என்ற வகையில் ஷஷாத் போஸ் கொடுத்துள்ளார். அதைப் பார்க்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் “கோப்பையுடன் எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்பதை ஹர்திக் பாண்டியாவுக்கு ஷஷாத் கற்றுக் கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற பின் ஹர்திக் பாண்டியா தான் அப்படி கொண்டாடினார்.

- Advertisement -

இந்திய ரசிகர்கள் பதிலடி:

அதைப் பார்த்து தற்போது ஷஷாத் உட்பட நிறைய வீரர்கள் கொண்டாடுவதை ரசிகர்கள் அறிவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியாவை காப்பி அடித்து விட்டு தற்போது அவருக்கே கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்கிறீர்களா? என பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். அத்துடன் 2025ஆம் ஆண்டு ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி, ஆசியக் கோப்பை, ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஆகிய பெரும்பாலான சாம்பியன் பட்டங்களை இந்தியா வென்றுள்ளது.

இதையும் படிங்க: பவர்பிளே ஓவர்களில் 3 ஓவர்களை பும்ரா வீசுவது ஏன்? தெளிவான விளக்கத்தை கொடுத்த – கோச் கம்பீர்

அத்தொடர்களில் வெறுங்கையுடன் வெளியேறிய பாகிஸ்தான் ஹாங்காங் நாட்டில் தரமற்ற தொடரை வென்று விட்டு எங்களிடம் கொக்கரிக்கிறீர்களா? என்றும் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். மேலும் ஹாங்காங்கில் தினேஷ் கார்த்திக் தலைமையில் ராபின் உத்தப்பா போன்ற ஓய்வு பெற்ற வீரர்கள் தான் இந்தியாவுக்காக விளையாடினர். மறுபுறம் பாகிஸ்தானுக்கு பிஎஸ்எல் தொடரில் விளையாடும் தற்போதைய வீரர்கள் விளையாடினர். எனவே ஒருவேளை அபிஷேக் ஷர்மா போன்ற தற்போதைய வீரர்கள் விளையாடியிருந்தால் பாகிஸ்தானை அடித்து நொறுக்கி ஓட விட்டிருப்போம் என்றும் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -