- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தெ.ஆ கேப்டனே பயப்பட்ட அந்த இந்திய வீரருக்கு ஏன் வாய்ப்பு வழங்கல – தோல்விக்கு பின்னர் ரசிகர்கள் கோபம்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்தும் தென்ஆப்பிரிக்கா அணி அதனை எளிதில் சேஸிங் செய்து 212 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த முதலாவது டி-20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 211 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ரன் குவிப்பை எட்டியது. இரண்டாம் பாதி ஆட்டம் துவங்கிய போது தென் ஆப்பிரிக்க அணி நிச்சயம் இந்த ஸ்கோரை சேசிங் செய்யாது என்றே பலரும் நினைத்திருப்பார்கள்.

ஆனால் டேவிட் மில்லர் மற்றும் வேண்டர்டுஷன் ஆகியோரது சிறப்பான அதிரடி ஆட்டம் காரணமாக தென் ஆபிரிக்க அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்தி இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் அறிமுக வீரராக இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் ஒரு காட்டமான விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய அவர் பயிற்சியின்போது 163.7 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பந்து வீசினார். இதன் காரணமாக நிச்சயம் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவரது வேகப்பந்து வீச்சு எதிரணிகளை திணறவைக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர். அதேபோன்று தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவும் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் உம்ரான் மாலிக்கை எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது கஷ்டம் என்று வெளிப்படையாக பாராட்டிப் பேசியிருந்தார்.

அப்படி எதிர் அணியின் கேப்டனே உம்ரான் மாலிக் குறித்து அச்சம் தெரிவித்த வேளையில் அவருக்கு ஏன் வாய்ப்பை வழங்க வில்லை என்று இந்திய ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த டெல்லி மைதானம் அளவில் சிறியவை என்பதனாலும், உம்ரான் மாலிக்கின் கூடுதல் வேகத்தால் அதிக ரன்கள் கசிய வாய்ப்பு இருப்பதனாலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டும் ஏற்கனவே உம்ரான் மாலிக்கின் இடம் குறித்து தெளிவான விளக்கத்தை கொடுத்திருந்தார். அதன்படி இந்திய அணியில் ஏற்கனவே சீனியர் வீரர்கள் நிறைய பேர் உள்ளதாலும், சரியான காம்பினேஷன் இருந்தால் மட்டுமே உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் உம்ரான் மாலிக் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைவதற்கு நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்,

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து இந்திய அணியிலும் அந்த வேலையை சரியாக செய்த ஹார்திக் பாண்டியா – விவரம் இதோ

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற அவர் காத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று என்று கூறியிருந்ததாலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நிச்சயம் ஒரு போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by