ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து இந்திய அணியிலும் அந்த வேலையை சரியாக செய்த ஹார்திக் பாண்டியா – விவரம் இதோ

Pandya
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் இஷான் கிஷன் 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.

INDvsRSA

பின்னர் 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணியானது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் டேவிட் மில்லர் மற்றும் ராசி வேண்டர்டசன் ஆகியோரது சிறப்பான அதிரடி ஆட்டம் காரணமாக 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி பெரிய ரன் குவிப்பை வழங்கியிருந்தாலும் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் அசாத்தியமான ஆட்டம் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. அதோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வீறுநடைபோட்ட இந்திய அணியின் சாதனை பயணமும் இந்த போட்டியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

pandya 1

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் கஷ்டப்பட்டு வந்த பாண்டியா ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக தற்போது இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். என்னதான் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் பாண்டியாவின் செயல்பாடு மிகவும் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

ஏனெனில் வழக்கமாகவே இந்திய அணிக்கு பினிஷர் ரோலில் மிக அற்புதமாக செயல்பட்டு வரும் பாண்டியா இன்று முன்கூட்டியே ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று கூற வேண்டும். ஏனெனில் இந்த போட்டியில் 12 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி என 31 ரன்கள் எடுத்து அமர்களப்படுத்தினார். ஆனால் பந்து வீச்சில் அவர் ஒரு ஓவர் மட்டுமே வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்தார் என்பது ஒரு வருத்தத்திற்குரிய விடயம் தான்.

இதையும் படிங்க : கிரிக்கெட்டின் அசுரனாக அவதரிக்கும் ஐபிஎல் தொடர் ! மகிழ்ச்சியுடன் கவலை, வரமா – சாபமா, ஒரு அலசல்

இருப்பினும் பாண்டியாவின் செயல்பாடு ஐபிஎல் தொடரை தொடர்ந்து இந்திய அணியிலும் தற்போது மிகச்சிறப்பாக வெளிப்படுவதால் டி20 உலகக் கோப்பை தொடரில் பாண்டியா மிக முக்கிய வீரராக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் தெளிவாக தெரிகிறது.

Advertisement