முகமது சிராஜுக்கு வானுயர கட் அவுட் வைத்த ஹதராபாத் நகர நண்பர்கள் – வைரலாகும் புகைப்படம்

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் மற்றும் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் என 8 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை கபில் தேவ்வுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டார்.

siraj 1

- Advertisement -

கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இந்த இங்கிலாந்து தொடரிலும் அவர்களது மண்ணில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமாக பந்து வீசி வரும் சிராஜ் விக்கெட் எடுத்த பின்னர் தனது விரலை உதடுகளின் மீது வைத்து விக்கெட்டை கொண்டாடி வருகிறார்.

மேலும் இதுகுறித்து போட்டி முடிந்து பேசிய சிராஜ் : என்னால் அது முடியாது, இது முடியாது என்று சொல்பவர்களுக்கும், என்னை குறைத்து மதிப்பிட்டு பேசுபவர்களுக்கும், என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் பதிலடி கொடுக்கும் வகையில் தான் விக்கெட்டை இப்படி கொண்டாடி வருகிறேன் என்று சிராஜ் தெரிவித்திருந்தார்

siraj 1

என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் கொடுக்கும் ரிப்ளை தான் இந்த சிக்னல் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவரது இந்த புதிய சிக்னலை ஹைதராபாத் ரசிகர்கள் நகர வீதிகளில் வானுயர கட்டவுட் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

siraj 2

ஹைதராபாத்தை சேர்ந்த சிராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தற்போது தொடர்ச்சியாக இந்திய அணிக்காக விளையாடி வரும் வேளையில் அவரது சொந்த நகரில் ஹீரோவாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement