- Advertisement -
இந்திய கிரிக்கெட்

10 ஒய்ட்வாஷ்.. தோனி, கோலியை முந்திய ரோஹித் புதிய சாதனை.. ஆல் அவுட் ஸ்கோரில் இந்தியா சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்றுள்ளது. அதனால் சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளது. மேலும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் இந்திய அணி காண்பித்துள்ளது.

ஏனெனில் இத்தொடருக்கு முன்பாக சுமாரான ஃபார்மில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா 2வது போட்டியில் சதத்தை அடித்து அசத்தினார். அதே போல விராட் கோலியும் மூன்றாவது போட்டியில் 52 ரன்கள் குவித்து அசத்தினார். எனவே இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பான அவர்கள் கொஞ்சம் ஃபார்முக்கு வந்துள்ளது பலமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்தியாவின் சாதனை:

மறுபுறம் 3 – 0 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோற்றாலும் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் திறமை இருப்பதாக தெரிவித்த இங்கிலாந்து கடைசியில் அப்படியே தோற்றது. முன்னதாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112, ஸ்ரேயாஸ் ஐயர் 78, கோலி 52, ராகுல் 40 ரன்கள் எடுத்தார்கள்.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான போட்டியில் இந்தியா தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2009ஆம் ஆண்டு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 347 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அதை இந்தப் போட்டியில் இந்திய அணி உடைத்துள்ளது.

- Advertisement -

ரோஹித் சாதனை:

இது ஒரு புறமிருக்க கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இந்தியா ஒயிட் வாஸ் வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இது கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு 4வது ஒயிட்வாஸ் வெற்றியாகும். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் (குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடர்களில்) அதிக முறை ஒயிட்வாஷ் வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 233 ரன்ஸ்.. விராட் கோலி – கோன்ஸ்டஸ் மோதல் ரிப்பீட்.. உலக சாதனை படைத்த தெ.ஆ வீரரிடம் மோதிய அப்ரிடி

இதற்கு முன் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி தலா 3 முறை ஒயிட் வாஸ் வெற்றிகளை பெற்றதே முந்தைய சாதனையாகும். இது போக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஒய்ட்வாஷ் வெற்றிகளைப் பெற்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 10*
2. விராட் கோலி: 6
3. எம்எஸ் தோனி: 5

- Advertisement -