ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த 5 இந்திய வீரர்கள். இதுல இர்பான் பதான் தான் ஸ்பெஷல் – லிஸ்ட் இதோ

Pathan-1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகள் எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி இருந்தும் தொடர்ச்சியாக ஒரே ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஐந்து இந்திய பந்துவீச்சாளர்கள் பற்றி பார்ப்போம் .

Chetan

- Advertisement -

சேத்தன் சர்மா :

இவர் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கபில்தேவ் காலத்தில் விளையாடியவர். இவர்தான் முதன்முதலாக இந்திய அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர். 1989 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கென் ரதர்ஃபோர்ட், இயன் ஸ்மித் மற்றும் ஈவன் சாட்ஃபீல்ட் ஆகியோரை வீழ்த்தியிருந்தார்.

kapildev

கபில்தேவ் :

- Advertisement -

இவர்தான் இந்திய அணிக்கு முதன்முதலாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஆவார். இவர் ஒரு வேகப்பந்து வீசுமவ ஆல்-ரவுண்டராவார். 1991 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ரோஷன் மகானமா, ருமேஷ் ரத்ணயகே, சனத் ஜெயசூர்யா ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் வீழ்த்தி இருந்தார்

ஹர்பஜன் சிங் :

- Advertisement -

ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியபோது அவருக்கு வயது வெறும் 20 தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், வார்னே ஆகிய மூவரையும் கொல்கத்தா மைதானத்தில் வைத்து பொட்டலம் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

pathan

இர்பான் பதான் :

- Advertisement -

இந்திய வீரர்கள் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுகளிலேயே இதுதான் ஸ்பெஷலான ஒன்றாகும். ஏனெனில் தான் வீசிய முதல் ஓவரிலேயே தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுவும் அந்த போட்டியில் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் எடுத்து அசத்தியிருந்தார். மேலும் இந்த 3 விக்கெட்டுகளும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வந்தது 2006 ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற போட்டியில் சல்மான் பட், யூனிஸ் கான், மோகமத் யூசப் ஆகியோரை போட்டியின் முதல் மூன்று பந்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தார் இர்பான் பதான்.

Kuldeep-1

குல்தீப் யாதவ் :

இவர் தற்போதைய காலகட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவதற்கு பெயர் போன வீரராவார் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஒரே ஒரு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2019ஆம் ஆண்டு ஒரு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

Advertisement