IND vs AUS : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் இணைந்து படைத்த அற்புதமான சாதனை – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது.

IND vs AUS

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது நான்காவது நாளின் மூன்றாவது செஷன் வரை 5 விக்கெட்டுகளை இழந்து 530 ரன்கள் குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் டாப் 6 வீரர்களும் சேர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அந்த வகையில் இந்திய அணி படைத்தை சாதனை யாதெனில் :

Rohit 1

இந்த போட்டியின் முதல் விக்கெட்டில் இருந்து தற்போது விளையாடி வரும் ஆறாவது விக்கெட் வரை ஒவ்வொரு பார்ட்னர்ஷிப்புக்கும் ஐம்பது ரன்களுக்கு மேல் குவித்து முதல் ஆறு விக்கெட்டிலுமே 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் முறையாக இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : NZ vs SL : எப்படியாவது ஜெயிச்சுடுங்க, டஃப் கொடுக்கும் இலங்கை – நியூஸிலாந்துக்கு சப்போர்ட் செய்யும் இந்திய ரசிகர்கள்

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி கடந்த 1960 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்த சாதனையை செய்துள்ளது. அதேபோன்று பாகிஸ்தான அணி கடந்த 2015-ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக குல்னாவில் நடந்த போட்டியில் இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement