- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விரும்பியதை வங்கதேசமே கொடுத்துட்டாங்க.. அர்ஷ்தீப்பை கழற்றி விட்ட ரோஹித்.. இந்திய பிளேயின் லெவன் இதோ

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நேற்று துவங்கியது. அதில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடுகிறது. 2013க்குப்பின் இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி துபாயில் பிப்ரவரி 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைக் கேட்ட ரோகித் சர்மா இந்தியாவும் முதலில் இந்த மைதானத்தில் ஃபீல்டிங் செய்யவே விரும்பியதாக மகிழ்ச்சியை தெரிவித்தார். ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பாக இங்கே விளையாடிய போது சேசிங் செய்வது நன்றாக இருந்ததாக ரோஹித் சர்மா கூறினார்.

- Advertisement -

அர்ஷ்தீப் இல்லை:

இந்திய அணியில் இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஒருநாள் போட்டியில் விளையாடாத வருண் சக்கரவர்த்தி இன்றும் விளையாடவில்லை என ரோஹித் தெரிவித்தார். மேலும் ஷமி, ஜடேஜா மீண்டும் விளையாடுவதாக தெரிவித்த அவர் அர்ஷ்தீப்புக்கு பதிலாக ராணா விளையாடுவார் என்று கூறியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் ராணா கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமானதால் பெரிய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நானும் முதலில் பவுலிங் தான் செய்திருப்பேன். சில வருடங்களுக்கு முன்பே இங்கு நாங்கள் விளையாடிய போது இரவு நேரத்தில் பேட்டிங் செய்வது நன்றாக இருந்ததாக உணர்ந்தோம். அனைத்தும் நன்றாக இருக்கிறது. எங்கள் வீரர்கள் அனைவரும் ஃபிட்டாக விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்”

- Advertisement -

இந்திய ஓப்பனிங் லெவன்:

“நாங்கள் நன்றாக துவங்குவோம் என்று நம்புகிறோம். இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் திருப்பிப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. கடைசியாக நாங்கள் விளையாடிய ஒருநாள் போட்டியிலிருந்து வருண் மட்டும் விளையாடவில்லை. ஜடேஜா, ஷமி மீண்டும் வருகிறார்கள். அர்ஷ்தீப் மிஸ் செய்கிறார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: எப்போவும் இந்திய நாடு தான் முக்கியம்.. ஸ்கூல் குழந்தை மாதிரி அது வரை விளையாடுவேன்.. ஓய்வு பற்றி தோனி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்டிக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா , ஹர்ஷிட் ராணா, முகமத் ஷமி, குல்தீப் யாதவ்

- Advertisement -