9 வருடம் கழித்து.. 2வது டெஸ்டில் டாஸ் வென்று அதிரடி முடிவை எடுத்த ரோஹித் சர்மா.. வங்கதேச சவால் பற்றி பேட்டி

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 1 – 0* (2) என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை பெற்றது.

அதைத் தொடர்ந்து 2வது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்கியது. அதிகாலையிலேயே மழை பெய்ததால் கான்பூர் மைதானம் ஈரப்பதமாக இருந்தது. அதனால் காலை 9.30 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி கொஞ்சம் தாமதமாக 10.30 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

- Advertisement -

வித்யாச முடிவு:

கான்பூர் மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிகமான வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா அதற்கு மாறாக பந்து வீசுவதாக அறிவித்தார். சொல்லப்போனால் இதன் வாயிலாக 9 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடைபெறும் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இதற்கு முன் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள நடைபெற்ற போட்டியில் அப்போதைய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அந்த வகையில் அதிரடியான முடிவை எடுத்த ரோஹித் சர்மா இந்திய அணியில் எந்த மாற்றம் செய்யாமல் மற்றுமொரு அதிரடி முடிவை அறிவித்தார். குறிப்பாக முதல் போட்டியில் வென்றதால் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்திய அணி:

இருப்பினும் அதை செய்யாத ரோகித் சர்மா டாஸ் வென்று பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். பிட்ச் கொஞ்சம் மிருதுவாக இருப்பது போல் தெரிகிறது. எனவே அதை நாங்கள் ஆரம்பத்திலேயே 3 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து பயன்படுத்த உள்ளோம். முதல் போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் நன்றாக செயல்படவில்லை. இருப்பினும் வெற்றிக்கு தேவையான ஸ்கோர் அடித்தோம்”

இதையும் படிங்க: தோனியை விட எனக்கு ரோஹித் போதும்.. விராட் கோலி – ஜோ ரூட் ஆகியோரில் சிறந்தவரை தேர்ந்தெடுத்த யுவ்ராஜ்

“பவுலர்கள் தங்கள் வேலையை செய்தனர். வங்கதேசத்திடம் இந்தப் போட்டியிலும் நாங்கள் சவாலை எதிர்கொள்வோம் என்று எதிர்பார்ப்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் எங்களுக்கு சவாலை கொடுக்கலாம். ஆனால் அதிலிருந்து கம்பேக் கொடுப்பதற்கான அனுபவம் எங்களிடம் உள்ளது” என்று கூறினார்.

Advertisement