- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அடித்து நொறுக்கிய ஷ்ரேயாஸ் ஐயர். எளிதான வெற்றியை பெற்ற இந்திய அணி – விவரம் இதோ

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று ஆக்லாந்து மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் முன்ரோ 59 ரன்களும், ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும் குவித்தனர். அதன்பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

- Advertisement -

தொடக்க வீரரான ரோகித் சர்மா 7 ரன்களுக்கு துவக்கத்திலேயே ஆட்டமிழக்க அதன் பின்னர் ராகுல் மற்றும் கோலி ஜோடி இணைந்து அபாரமாக விளையாடியது. இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவிக்க ராகுல் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் கோலியும் 45 ரன்களில் வெளியேற ஸ்ரேயாஸ் அய்யர் தனது சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியிலும் தொடர்ந்தார்.

மொத்தம் 29 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் என 58 ரன்கள் குவித்தார். மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் குவிக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நான்காவது இடத்தில் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்து இந்திய அணியை ஆட்டமிழக்காமல் சிக்ஸர் அடித்து எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by