- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெறும் 6 ரன்ஸ்.. பஸ்பால் இங்கிலாந்துக்கு மண்டியிடாத இந்தியா.. சரித்திரம் காணாத மிராக்கிள் சாதனை வெற்றி

இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் கடைசிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து 247 ரன்கள் அடித்து 23 ரன்களை முன்னிலையாகப் பெற்றது. அதிகபட்சமாக பென் டக்கெட் 43, ஜாக் கிராவ்லி 64, ஹாரி ப்ரூக் 53 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து அபாரம்:

அதைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா அபாரமாக பேட்டிங் செய்து 396 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 118, ஆகாஷ் தீப் 66, ஜடேஜா 53, சுந்தர் 53 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியாக 374 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 14 ரன்களில் அவுட்டானாலும் பென் டக்கெட் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த கேப்டன் ஓலி போப் 27 ரன்களில் அவுட்டானாலும் ஜோ ரூட் – ஹாரி ப்ரூக் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்.

அதில் சிராஜ் கேட்ச் தவற விட்டதைப் பயன்படுத்திய ஹாரி ப்ரூக் இந்தியாவை வருந்தும் அளவுக்கு அடித்து நொறுக்கி சதத்தை விளாசி 111 (98) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் தம்முடைய பங்கிற்கு இந்தியாவை பந்தாடி சதத்தை அடித்து 105 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தார். அதோடு இந்தியா தோல்வியடைந்ததாகவே அனைவரும் கருத்தினர்.

- Advertisement -

சரித்திரம் காணாத வெற்றி:

அப்போது கடவுள் கருணை போல் நான்காவது நாள் மாலையில் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. கடைசி நாளில் இங்கிலாந்துக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் மனதில் தெம்பை விடாத சிராஜ் இன்றைய ஆட்டத்தில் ஜேமி ஸ்மித்தை 9 ரன்களில் அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார்.

அடுத்த சில ஓவரில் மறுபுறம் சவாலை கொடுத்த ஓவர்டனையும் அவர் 9 ரன்னில் காலி செய்தார். அதே போல ஜோஸ் டாங் 12 பந்தில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் டக் அவுட்டானார். அப்போது கிறிஸ் ஓக்ஸ் உடைந்த கையையும் பொருட்படுத்தாமல் ஒற்றை கையுடன் பேட்டிங் செய்ய வந்தார். அதை பயன்படுத்தி எதிர்புறம் சவாலை கொடுத்த அட்கின்ஸனை 17 ரன்னில் சிராஜ் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

அதனால் இங்கிலாந்தை 367க்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா வெறும் 6 ரன்கள் மிராக்கிள் வித்தியாசத்தில் வென்று 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து டெண்டுல்கர் – ஆண்டர்சன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10 ரன்னுக்கும் குறைவாக வெற்றி பெற்று இந்தியா சரித்திரம் காணாத சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2004 வான்கடே போட்டியில் ஆஸ்திரேலியாவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்தியாவின் முந்தைய திரில் வெற்றி.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு செயலில் காட்டும் சிராஜுக்கு.. ஒருவழியா எல்லாரும் இதை கொடுப்பது மகிழ்ச்சி.. மோர்கெல் பாராட்டு

மேலும் பஸ்பால் ஸ்டைலை கொண்ட இங்கிலாந்திடம் விராட், ரோஹித் இல்லாத இளம் இந்தியா படுதோல்வியை சந்திக்கும் என்று மைக்கேல் வாகன் போன்ற பலரும் கணித்தனர். ஆனால் ஆரம்பம் முதலே சவாலைக் கொடுத்த இளம் இந்திய அணி இங்கிலாந்திடம் மண்டியிடாமல் திருப்பி அடித்து தொடரை சமன் செய்துள்ளது.

- Advertisement -