336 ரன்ஸ்.. வெளிநாட்டு மண்ணில் இளம் இந்தியா பிரம்மாண்ட சாதனை வெற்றி.. இங்கிலாந்துக்கு மாஸ் பதிலடி

India Win
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா அதனுடைய சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 சதங்கள் அடித்து வரலாறு காணாத சாதனை படைத்தது. ஆனால் சிறப்பாக ஃபினிசிங் செய்யத் தவறியதாலும், 7 கேட்ச்களை கோட்டை விட்டதாலும் இந்தியா பரிதாபமாக தோற்றது.

அந்த நிலையில் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 மற்றும் 427/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து வலுவான அடித்தளத்தை போட்டது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதத்தை அடித்து 269, சதத்தை அடித்து 161 ரன்கள் குவித்து பல சாதனைகளைப் புரிந்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பௌலிங் செய்த இந்தியா 407 ரன்களுக்கு சுருட்டி 180 ரன்கள் முன்னிலையாகப் பெற்றது.

- Advertisement -

இங்கிலாந்துக்கு பதிலடி:

இறுதியாக 608 என்ற இமாலய இலக்கைத் துரத்திய இங்கிலாந்தை மீண்டும் சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 271 ரன்களுக்கு சுருட்டியது. அதனால் 336 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. பந்து வீச்சில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 10, சிராஜ் 7 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இதன் வாயிலாக பர்மிங்காம் மைதானத்தில் சந்தித்த தொடர் தோல்விகளை உடைத்த இந்தியா முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றியைப் பதிவு செய்த முதல் ஆசிய அணி என்ற சரித்திரத்தையும் இந்தியா படைத்துள்ளது. அதை விட ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா மற்றுமொரு சரித்திர சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

மெகா சாதனை வெற்றி:

இதற்கு முன் 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இருக்கும் நார்த் சௌண்ட் மைதானத்தில் விராட் கோலி தலைமையில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றதே முந்தைய பெரிய வெற்றியாகும். இம்முறை விராட், ரோஹித் இல்லாததால் இந்தியா தோற்கும் என்று பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்தார்கள். அதற்கேற்றார் போல் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா மோசமான உலக சாதனை தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: கில் செஞ்சதை நம்ப முடியல.. அது எங்க காலை வாரிடுச்சு.. இந்தியாவிடம் தோற்க இதான் 2 காரணம்.. ஸ்டோக்ஸ்

ஆனால் அதற்கெல்லாம் அசராத சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி அடுத்த போட்டியிலேயே இங்கிலாந்தை சொந்த மண்ணில் தோற்கடித்து பிரம்மாண்ட வெற்றி கண்டுள்ளது. அதனால் அனுபவமின்மையால் தோற்கும் என்று குறைத்து மதிப்பிட்ட இங்கிலாந்தினருக்கு இளம் இந்திய படை மறக்க முடியாத தோல்வியைப் பரிசாக கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து 2வது போட்டியில் பும்ரா வரவிருப்பது இந்தியாவுக்கு மேலும் பலமாகும்.

Advertisement