42 ரன்ஸ்.. சஞ்சு சாம்சன் அபார சாதனை.. 4 – 1.. ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாம்பியன் என்பதை காட்டிய இந்தியா

IND vs ZIM 5
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடியது. அதில் முதல் போட்டியில் தோற்ற இந்தியா அதற்கடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்றது. அதனால் ஆரம்பத்திலேயே இந்தியா தொடரையும் கைப்பற்றியது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி ஜூலை 14ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கியது.

ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அடுத்தடுத்த சிக்சர்களைப் பறக்க விட்ட ஜெய்ஸ்வால் 12 (5) ரன்னில் சிக்கந்தர் ராசா சுழலில் போல்ட்டானார். அடுத்ததாக வந்த அபிஷேக் ஷர்மா 14 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
அடுத்த சில ஓவரில் மறுபுறம் திணறிய கேப்டன் கில் 13 (14) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 40/3 என தடுமாறிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் ரியான் பராக் தடுமாற்றமாக விளையாடி 22 (24) ரன்னில் அவுட்டானார். அடுத்த ஓவர்களில் சாம்சனும் அரை சதமடித்து 58 (45) ரன்களில் அவுட்டானார்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக அரை சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் தோனி, ரிஷப் பண்ட் போன்ற யாருமே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அரை சதமடித்ததில்லை. இறுதியில் சிவம் துபே அதிரடியாக 26 (12), ரிங்கு சிங் 11* (9) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 167/6 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக முசரபானி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 168 ரன்களை துரத்திய ஜிம்பாப்பே அணிக்கு முதல் ஓவரிலேயே வேஸ்லியை டக் அவுட்டாக்கிய முகேஷ் குமார் அடுத்த ஓவரில் அடுத்து வந்த பிரையன் பெனெட்டை 10 (8) ரன்னில் காலி செய்தார். அதனால் 15/2 என தடுமாறிய அந்த அணிக்கு நிதானமாக விளையாட முயற்சித்த மருமணி 27 (24) ரன்னில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார்.

அவருடன் சேர்ந்து மறுபுறம் நிதானமாக விளையாடிய டியோன் மேயர்ஸ் 34 (32) ரன்கள் வேகத்தில் அவுட்டானார். அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சிக்கந்தர் ராசா 8 ரன்னில் ரன் அவுட்டானார். இறுதியில் கேம்பல் 4, க்ளைவ் 1, பாரஸ் அக்ரம் 27 ரன்கள் எடுத்தும் 18.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணியை சுருட்டிய இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க: என்ன நடந்தாலும் இந்திய அணி அங்கு போகாது.. அதனால எந்த பிரச்சனையும் நமக்கு இல்ல – ஹர்பஜன் சிங் காட்டம்

இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 4, சிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. குறிப்பாக முதல் போட்டியில் தோற்றும் முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வென்றுள்ள இந்தியா தங்களை உலக சாம்பியன் என்பதையும் நிரூபித்துள்ளது.

Advertisement