ஆஸியை நொறுக்கிய இந்திய மகளிரணி அதிரடி வெற்றி.. 2461 பந்துகளில் மந்தனா புதிய உலக சாதனை

Indian Womens
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிரணி 3 விதமான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா கோப்பையை வென்று அசத்தியது. ஆனால் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிரடியாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியாவை ஒய்ட் வாஷ் செய்து கோப்பையை வென்று பழி தீர்த்தது.

அந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 5ஆம் தேதி நவிமும்பையில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிரணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முயற்சித்தது.

- Advertisement -

அசத்திய மகளிரணி:
இருப்பினும் இந்திய வீராங்கனைகள் நேர்த்தியாக பந்து வீசியதால் சீரான இடைவெளிகளில் அனைத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 19 ஓவரில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக போபே லிட்ச்பீல்ட் 49 (32) ரன்களும் நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெரி 37 (30) ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக இளம் வீராங்கனை டைட்டர்ஸ் சாது 4 ஓவரில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அவருடன் தீப்தி சர்மா மற்றும் ஸ்ரேயாங்கா பாட்டில் ஆகியோரும் தலா 2 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்கள். அதைத்தொடர்ந்து 142 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள்.

- Advertisement -

நேரம் செல்ல செல்ல ஆஸ்திரேலிய வீராங்கனைகளை சிறப்பாக எதிர்கொண்டு அரை சதம் கடந்து 137 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்து இந்த ஜோடியில் ஸ்மிருத்தி மந்தனா 7 பவுண்டரி 1 சிக்சருடன் 54 (52) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக விளையாடிய ஷாபிலி வர்மா 6 பவுண்டரி 3 சிக்சருடன் 64* (44) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

அதனால் 17.4 ஓவரிலேயே 145/1 ரன்கள் எடுத்த இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் எடுத்த 54 ரன்களையும் சேர்த்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 3000 ரன்கள் வீராங்கனை என்ற உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார். அந்த பட்டியல்:
1. ஸ்மிருத்தி மந்தனா (இந்தியா) : 2461*
2. சோஃபி டேவின் (நியூஸிலாந்து) : 2470
3. மெக் லென்னிங் (ஆஸ்திரேலியா) : 2597
4. சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து) : 2679

Advertisement