இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்த லீக் போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த பல வருடங்களாக எல்லைப் பிரச்சனை காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் 26 அப்பாவி மக்கள் இயற்கை எழுதியதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகளை எடுத்தது. அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு பங்கத்தை விளைவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடலாமா என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் இருந்தன.
இந்தியாவே முக்கியம்:
அதனால் யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதிலிருந்து பின்வாங்குவதாக அறிவித்தனர். அதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
அதே போல இந்திய அணி போராடி 4வது இடத்தை பிடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதனால் விதிமுறைப்படி முதலிடம் பிடித்த பாகிஸ்தானுக்கு எதிராக 4வது இடத்தை பிடித்த இந்தியா ஜூலை 31ஆம் தேதி முதல் அரையிறுதி போட்டியில் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவானது. அதன் காரணமாக “இப்போது மட்டும் இந்தியாவை எந்த முகத்தை வைத்துக்கொண்டு எங்களுக்கு எதிராக விளையாட வருவார்கள்?” என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி விமர்சித்தார்.
விலகிய இந்திய படை:
இந்நிலையில் இந்திய திருநாட்டை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இருந்து விலகுவதாக யுவ்ராஜ் சிங் தலைமையிலான அணி அறிவித்துள்ளது. இது பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு. “கனத்த இதயத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியிலிருந்து இந்தியா சாம்பியன்ஸ் அணி விலக முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு எளிதாக எடுக்கப்படவில்லை. நாங்கள் கிரிக்கெட்டை சுவாசித்து வாழ்கிறோம். ஆனால் நாட்டின் பெருமையை தாங்கி நிற்கும் எங்களுடைய வீரர்கள் உணர்வுபூர்வமான கொந்தளிப்பு மற்றும் தவறான மதிப்பிடலுக்கு உள்ளாகியுள்ளனர்”
இதையும் படிங்க: அதுக்காக வருத்தப்படல.. இந்தியா அதை மறந்துட்டு 5வது போட்டிக்கு வருவாங்கன்னு நம்புறேன்.. ஸ்டோக்ஸ் பேட்டி
“பயம் மற்றும் குறையின்றி விளையாடுவதற்கான உரிமையைக் கொண்ட அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம். இப்போட்டியிலிருந்து நாங்கள் விலகினாலும் தத்துவத்தில் இருந்து விலகவில்லை. கிரிக்கெட்டை விட நாடே முக்கியம். அனைத்தையும் விட ஒருமைப்பாடே முக்கியம் ஜெய்ஹிந்த்” என்று அப்ரிடிக்கு பதிலடி கொடுத்துள்ளது. அதனால் பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் விளையாட நேரடியாக தகுதி பெற்றுள்ளது.



