அதுக்காக வருத்தப்படல.. இந்தியா அதை மறந்துட்டு 5வது போட்டிக்கு வருவாங்கன்னு நம்புறேன்.. ஸ்டோக்ஸ் பேட்டி

Ben stokes
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் விளையாடுகிறது. மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் அத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே ஜூலை 31ஆம் தேதி துவங்கும் கடைசிப் போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராக உள்ளது.

சொல்லப்போனால் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது கேஎல் ராகுல் 90, கேப்டன் கில் 103 ரன்கள் அடித்து கை கொடுத்தனர். அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தி சதத்தை நெருங்கினார்கள்.

- Advertisement -

வருத்தப்படாத ஸ்டோக்ஸ்:

அப்போது இனிமேலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்று உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவர்களுடைய சதத்தை தடுக்கும் நோக்கத்தில் போட்டியை முடித்துக்கொள்ள முன் வந்தார். இருப்பினும் இந்திய கேப்டன் கில் அதை ஏற்காததைத் தொடர்ந்து விளையாடிய ஜடேஜாவும் சுந்தரும் சதத்தை அடித்தார்கள். அத்தோடு போட்டியை முடித்துக்கொண்ட இந்தியா நேர்மைத்தன்மையுடன் விளையாடாமல் சொந்த சாதனைகளுக்காக விளையாடியதாக இங்கிலாந்தினர் விமர்சித்தனர்.

மேலும் சதத்தை அடிக்க விரும்பினால் பவுன்சர்களை போட்டு மண்டையை அடிப்போம் என்று ஆர்ச்சர் உள்ளிட்ட சில இங்கிலாந்து வீரர்கள் ஜடேஜாவை மிரட்டினர். எனவே அதற்கெல்லாம் சேர்த்து கடைசிப் போட்டியில் வென்று இங்கிலாந்தை தோற்கடித்து பதிலடி கொடுக்க இளம் இந்திய அணி தயாராகியுள்ளது. இந்நிலையில் மான்செஸ்டரில் நடந்ததை மறந்து விட்டு இந்திய அணி 5வது போட்டிக்கு விளையாட வருமென்று நம்புவதாக ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மறந்துட்டு வாங்க:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அப்படி செய்ததற்காக எந்த வருத்தமும் இல்லை. அது 250 ஓவர்கள் வீசிய பின்பும் நீங்கள் களத்தில் இருக்க விரும்பாத தருணங்களில் ஒன்றாகும். சுந்தர், ஜடேஜா ஆகியோர் அந்த சமயம் வரை அற்புதமாக பேட்டிங் செய்தார்கள். எனவே அவர்கள் தங்களுடைய சதத்தை அடிக்க விரும்பியதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது”

இதையும் படிங்க:

“ஆனால் ஏற்கனவே சொன்னது போல, போதுமான நியாயமான வகையில் நான் எங்களுடைய பவுலர்களை விளையாட வைத்து காயமடைய வைக்க விரும்பவில்லை. நாங்கள் அந்த விஷயத்திலிருந்து வெளியே வந்து விட்டோம். இந்த மொத்த விஷயத்தில் இருந்து இந்தியாவும் வெளியே வந்திருக்கும் என்று நம்புகிறோம். கிரிக்கெட்டின் அந்த 20 நிமிடத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருக்க முயற்சிப்போம். மற்றபடி இது மிகவும் சிறந்த தொடராக இருந்து வருகிறது” என்று கூறினார்.

Advertisement