IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றிக்கு முக்கிய ஆயுதம் இதுதான் – விவரம் இதோ

உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று மதியம் 3 மணிக்கு மோதவுள்ளன. இந்த போட்டி

Kohli
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று மதியம் 3 மணிக்கு மோதவுள்ளன. இந்த போட்டி குறித்து தற்போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளுமே மிக பலம் வாய்ந்த அணிகள்.

india

- Advertisement -

ஆஸ்திரேலியா தொடர்ந்து இரு போட்டியிலும் வென்று இன்று இந்தியாவை சந்திக்கிறது. அதேபோன்று இந்தியா முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சிறப்பாக வீழ்த்தி இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி ஒரு முக்கியமான போட்டியாகும். இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் திட்டம் குறித்து தற்போது ஒரு அலசலை பார்ப்போம்.

அதன்படி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை விரைவில் விட்டிருந்தாலும் பின்னால் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடி 288 ரன்கள் குவித்தனர். அதிலும் குறிப்பாக எட்டாவது வீரராக இறங்கிய குல்டர் நைல் 92 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்த அளவிற்கு பின் வரிசையிலும் ஆஸ்திரேலிய அணி பலமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் வேகப்பந்து வீச்சு மற்றும் ஸ்பின் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக ஆடுகிறார்கள்.

coulternile

எனவே அவர்களது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்துவது முக்கியம். இல்லையெனில் அது இந்திய அணியின் வெற்றிக்கு பாதகமாக முடியும். எனவே இன்றைய போட்டியில் துவக்கத்தில் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோரை வைத்து ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்து இடையில் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின் பவுலர்களை பயன்படுத்தி ஆஸ்திரேலிய நெருக்கத்தை கொடுத்து விக்கெட்டுகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.

chahal

அவர்களது விக்கெட்டை வீழ்த்த தவறினால் அவர்கள் சிறப்பாக ஆடி போட்டியின் முடிவை மாற்றும் தன்மையுடையவர்கள். எனவே இன்றைய போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது ராகுல் நான்காவது இடத்திற்கு பொருத்தமாக ஆடுகிறார். அதனால் பேட்டிங் குறித்த கவலை இல்லை எனவே இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த பந்துவீச்சு முக்கிய ஆயுதமாக கருதப்படுகிறது.

Advertisement