
பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து பெரிய தவறாக மாறியது. ஏனெனில் வேகத்துக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் நியூசிலாந்திடம் சுமாராக பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 350 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியது. அதனால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
அப்படியே போராடினாலும் குறைந்தபட்சம் ட்ரா மட்டுமே செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் மோசமான பாடத்தை கற்றுள்ள இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 400 ரன்கள் அடிக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். குறிப்பாக 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆன் பெற்ற இந்தியா கடைசியில் டிராவிட் – லக்ஷ்ம்ன் அபார ஆட்டத்தால் வென்றது.
அதே போல இந்தப் போட்டியில் இந்தியா போராடி கம்பேக் கொடுத்து வெல்லும் என்று ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2001இல் வெற்றி பெற்ற போது யாருமே அது நடக்கும் என்று நினைக்கவில்லை. கடைசியாக கான்பூரில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் வெற்றி கிடைக்கும் என்று நாம் நினைக்கவில்லை”
“அதே போல இந்த போட்டியும் துவங்கியுள்ளது. இப்போட்டியில் கண்டிப்பாக இந்தியா வெல்லும் என்று நான் கனவு காணவில்லை. ஆனால் வாய்ப்பு இருக்கிறது. 46க்கு ஆல் அவுட்டான இன்னிங்ஸ் முடிந்து விட்டது. பிட்ச் கொஞ்சம் நன்றாக இருக்கும். எதிரணியினர் 10 விக்கெட்டுகளை எடுத்தது. இனிமேலும் உங்களை அது முடிந்து விட்டது”
இதையும் படிங்க: அவர மாதிரி ஒரு ப்ளேயர் இந்தியாவுக்கு தேவை.. கோலி விஷயத்தில் ரோஹித் தப்பு பண்ணிட்டாரு.. அனில் கும்ப்ளே
“இனிமேல் சுழல் பந்து வீச்சு சவாலை கொடுக்கலாம். அது போன்ற சூழ்நிலையில் கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்தரா, அஜஸ் பட்டேல் சவாலை கொடுக்க வருவார்கள். அப்போது உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கையுடன் விளையாட வேண்டும். ஏனெனில் 8வது இடத்தில் விளையாடும் உங்களுடைய வீரர் கூட 6 சதங்கள் அடித்துள்ளார். எனவே அந்த நம்பிக்கையுடன் விளையாடினால் 400 – 450 ரன்கள் அடிக்க முடியும். அதற்கு நீங்கள் விரைவாக நியூசிலாந்தை சுருட்ட வேண்டும்” என்று கூறினார்.