நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அதற்கு மழையால் வேகத்துக்கு சாதகமாக இருந்த பெங்களூரு பிட்ச்சில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் பேட்டிங் செய்தது முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது போலவே விராட் கோலியை மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா களமிறக்கியது முற்றிலும் தவறு என முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இது போன்ற சவாலான சூழ்நிலைகளில் 3வது இடத்தில் புஜாரா போன்றவர் விளையாடியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
ரோஹித்தின் மற்றொரு தவறு:
“விராட் கோலி நான்காவது இடத்தில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு அவர் தான் உங்களுடைய நம்பர் ஒன் பேட்ஸ்மேன். மூன்றாவது இடத்தில் புஜாரா போன்றவர் நீண்ட காலம் விளையாடி அசத்தியவர். அங்கே 100 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்ட அவர் இப்போட்டியில் விளையாடியிருந்தால் மற்ற பேட்ஸ்மேன்களைப் போல் நல்ல பந்துகளை அடித்திருக்க மாட்டார்”
“அவர் மோசமான பந்துகள் தம்மை நோக்கி வர அனுமதித்திருப்பார். அவரைப் போன்றவரை தான் இன்று நாம் தவற விட்டோம். இந்தப் போட்டி மட்டுமின்றி வருங்காலங்களிலும் மூன்றாவது இடத்தில் அவரைப் போன்ற வீரர் இல்லாதது நமக்கு கவலையை கொடுக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலி எப்போதுமே மூன்றாவது இடத்தில் களமிறங்கி அரை சதம் கூட அடித்ததில்லை.
இந்தியா போராடுமா:
மறுபுறம் புஜாரா 3வது இடத்தில் விளையாடி 100 போட்டிகளுக்கு மேல் பேட்டிங் செய்து இந்தியாவின் வெற்றிகளில் பங்கேற்றினார். இருப்பினும் சமீப காலங்களில் சுமாராக விளையாடியதால் அவரை இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது. ஆனால் இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க புஜாரா போன்ற ஒரு பேட்ஸ்மேன் இந்தியாவுக்கு தேவை என்று அனில் கும்ப்ளே அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மூன்றாவது நாளிலும் ரிஷப் பண்ட் கீப்பிங் செய்ய மாட்டார்.. தெளிவான காரணத்தை வெளியிட்ட – பி.சி.சி.ஐ
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் நியூஸிலாந்து 250 ரன்களுக்கு மேல் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36க்கு ஆல் அவுட்டான பின்பும் இந்தியா கடைசியில் தொடரை வென்று சாதனை படைத்தது. அதே போல இந்த சரிவில் இருந்து மீண்டெழுந்து இந்தியா போராடி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.



