மூன்றாவது நாளிலும் ரிஷப் பண்ட் கீப்பிங் செய்ய மாட்டார்.. தெளிவான காரணத்தை வெளியிட்ட – பி.சி.சி.ஐ

Pant
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூரு நகரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் நிலையில் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது நாளும் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார் :

அதனை தொடர்ந்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 46 ரன்களுக்கு தங்களது முதல் இன்னிங்க்ஸை இழந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் நியூசிலாந்து அணியானது 200 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பயிற்சியில் ஈடுபடும் போது பந்து தாக்கியதால் காயமடைந்தார்.

இதன் காரணமாக நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்நிலையில் மூன்றாம் நாளான இன்றும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

இந்திய அணியின் மிக முக்கிய வீரரான ரிஷப் பண்ட் அறுவை சிகிச்சை செய்த காலில் பந்து தாக்கியுள்ளதால் அந்த காயத்தின் வீரியத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம். முன்னெச்சரிக்கை காரணமாகவே அவர் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார். ஏற்கனவே பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரது காலில் தற்போது அதே இடத்தில் மீண்டும் அடிபட்டுள்ளது.

இதையும் படிங்க : 15 வருடம் 15 வெற்றி.. அசுரன் ஆஸியை நாக் அவுட் செய்த தெ.ஆ சிங்கப்பெண்கள்.. சரித்திரம் காணாத சாதனை வெற்றி

அதன் காரணமாக நாங்கள் அவரை முழுமையாக கண்காணிக்க விரும்புகிறோம். எனவே மூன்றாவது நாளான இன்றும் துருவ் ஜுரேல் தான் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இதே விளக்கத்தை தான் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement