கடவுளின் கருணையால் இந்திய அணிக்கு வெற்றி உறுதி ஆகிவிட்டது – இதுவும் சரிதான்

Ind-vs-Nz
Advertisement

உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.

ind nz

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் மழையால் ஆட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மழை காரணமாக நேற்று முழுவதும் போட்டி நடைபெறாமல் கைவிடப்பட்டதால் ரிசர்வ் டே ஆன இன்று விளையாட உள்ளது. எந்த இடத்தில் அவர்கள் ஆட்டத்தை கைவிட்டார்களோ அதே இடத்திலிருந்து ஆட்டத்தை தொடருவார்கள். எனவே இன்றைய போட்டியின் முதல் 5 நிமிடங்களில் நியூசிலாந்து 50 ஓவர்களையும் முழுமையாக விளையாடிவிடும்.

Rain

மான்செஸ்டர் மைதானத்தை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த அணியே இதுவரை வென்றுள்ளது. மேலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணி இந்த மைதானத்தில் ரன்களை எடுக்க திணறியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடவுளின் அருளால் இந்திய அணிக்கு இந்த போட்டி வெற்றியோடு முடியும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Rain

ஏனெனில் நேற்றைய போட்டியில் இரண்டாவதாக இந்திய அணி பேட்டிங் செய்யவில்லை மேலும் இன்றைய போட்டியில் காலை மைதானம் பிரஷ்ஷாக இருக்கும். ஏனெனில் இன்று காலை மழை பெய்யாமல் வெயில் அடித்து மைதானம் காய்ந்து உள்ளதால் தற்போது இந்தியா முதலில் பேட்டிங் செய்வதற்கு இது சமமானது. அதனால் இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்றே கூறலாம்.

jadeja

ஏனெனில் நேற்று இரண்டாவதாக பேட்டிக் செய்திருந்தால் பிட்ச் ஸ்லோவாக இருந்திருக்கும் ஆனால் இன்று காலை துவங்கியதும் இந்திய அணியின் பேட்டிங் செய்ய இருப்பதால் மைதானம் கடினமாகவும் உறுதியாக இருப்பதால் இந்தியனின் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மழை பெய்தாலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லும், விளையாடினாலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement